Published : 08 Nov 2025 07:51 AM
Last Updated : 08 Nov 2025 07:51 AM

ரூ.14 கோடி மோசடி செய்த நாசிக் பெண் சாமியார் கைது

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரை சேர்ந்த ஐ.டி. பொறி​யாளர் தீபக் டோலாஸ் சில நாட்​களுக்கு முன், நாசிக் நகரை சேர்ந்த பெண் சாமி​யார் ஒரு​வருக்கு எதி​ராக புகார் அளித்​திருந்​தார்.

தீபக் டோலாஸின் 2 மகள்​கள் உடல்​நலப் பிரச்​சினை​களால் பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் அவர்​களை தனது ஆன்​மிக சக்​தி​யால் குணப்​படுத்​து​வ​தாக பெண் சாமி​யார் உறுதி அளித்​துள்​ளார். தீபக் டோலாஸுக்கு இங்​கிலாந்​தில் இருந்த வீடு, புனே நகரில் இருந்த நிலம், சொந்த ஊரில் இருந்த விவ​சாய நிலம் உள்​ளிட்ட சொத்​துகளை விற்​கும்​படி பெண் சாமி​யார் வற்​புறுத்​தி​யுள்​ளார். இதன் மூலம் அவர் சுமார் ரூ.14 கோடி பெற்​றுள்​ளார்.

இவ்​வளவு பணம் கொடுத்​தும் தனது மகள்​கள் உடல்​நிலை​யில் எந்த முன்​னேற்​ற​மும் இல்லை எனவும் தான் ஏமாற்​றப்​பட்​ட​தாக​வும் புகாரில் தீபக் டோலாஸ் கூறி​யிருந்​தார். இதன் அடிப்​படை​யில் அந்​தப் பெண் சாமி​யார் உள்​ளிட்ட 3 பேர் மோசடி வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x