Published : 08 Nov 2025 07:45 AM
Last Updated : 08 Nov 2025 07:45 AM

பிஹாரிலும் வாக்கு திருட்டு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்சி தலைவர் ராகுல் டெல்​லி​யில் நேற்று அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

தேர்​தல் முறை​கேடு​களை வெளிப்​படுத்​தும் ஏராள​மான ஆதா​ரங்​களை காங்​கிரஸ் கட்சி திரட்​டி​யுள்​ளது. இந்​தப் பணியை நாங்​கள் தொடர்​வோம். வாக்கு திருட்டு நடவடிக்​கை​யில் பாஜக ஈடு​பட்​டுள்​ளது, வாக்கு திருட்டு மூலம் பிரதமர் ஆனார் மோடி என்​பதை நாங்​கள் மக்​களுக்கு தெரி​விப்​போம். தேர்​தல் மோசடி எங்​கோ ஓர் இடத்​தில் நடப்​ப​தில்​லை. இது திட்​ட​மிட்டு நடத்​தப்​படு​கிறது.

இதே​போன்ற முறை​கேடு​கள்​தான் மத்​தி​ய பிரதேசம், சத்​தீஸ்​கர், ஹரி​யானா மற்​றும் குஜ​ராத்​தில் நடை​பெற்​றன. பிஹாரிலும் இதைத்​தான் செய்​யப்​போகிறார்​கள். அரசி​யல்​ சாசனம், மக்​களின் வாக்​கு​களை காப்​ப​தற்​காக, காங்​கிரஸ் கட்சி தொடர்ந்து இப்​பிரச்​சினையை எழுப்​பும்​. இவ்​வாறு ராகுல்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x