Published : 08 Nov 2025 07:24 AM
Last Updated : 08 Nov 2025 07:24 AM

புனே பெண் பிஹாரில் வாக்களித்ததாக காங். புகார்

புனே: புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் உர்​மி. இவர் தனது சமூக வலை​தளபக்​கத்​தில் பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் மோடிக்கு வாக்களித்து விட்​ட​தாக கூறி விரலில் அடை​யாள மையுடன் புகைப்​படம் ஒன்றை வெளி​யிட்​டார்.

இவர் முன்​னர் புனே​வில் நடை​பெற்ற தேர்​தலிலும் இதேபோன்று ஓட்​டளித்​து​விட்டு புகைப்​படம் ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். இதனை காங்​கிரஸ் கட்​சி​யினர் தோண்டி எடுத்து ஒரு நபர் இரண்டு மாநிலங்​களில் வாக்​களிக்​கலாம் என்​ப​தற்கு இதுவே சிறந்த உதா​ரணம் என்று தெரி​வித்​துள்​ளனர்.

இரட்டை மாநிலங்​களில் வாக்​களித்​தாக புகார் தீவிரமடைந்​ததை தொடர்ந்து வழக்​கறிஞர் உர்மி கூறுகை​யில், “பிஹார் மாநில வாக்​காளர்களை உற்​சாகப்​படுத்தி தேர்​தலில் வாக்கு செலுத்த வைக்க வேண்​டும் என்ற நோக்​கத்​துக்​காகவே அந்த பதிவை வெளி​யிட்​டேன். பிஹார் தேர்​தலில் நான் ஒருபோதும் வாக்​களிக்​க​வில்​லை" என்​று தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x