Published : 07 Nov 2025 06:58 AM
Last Updated : 07 Nov 2025 06:58 AM

கர்நாடக விவசாயிகள் 7-வது நாளாக போராட்டம்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் வட மாவட்​டங்​களான விஜயபு​ரா, பாகல்​கோட்​டை, பெல​காவி ஆகிய​வற்​றில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்​யப்படு​கிறது. அங்கு அரசு மற்​றும் தனி​யார் சர்க்​கரை ஆலைகளுக்கு கரும்பு விநி​யோகம் செய்​யும் விவ​சா​யிகளுக்கு உரிய ஆதரவு விலை வழங்​கப்​படு​வ​தில்லை என விவ​சா​யிகள் நீண்டகால​மாக குற்​றம்​சாட்டி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் ஒரு டன் கரும்​புக்கு ரூ.3,500 ஆதரவு விலை​யாக அரசு நிர்​ண​யிக்க வேண்​டும் என வலி​யுறுத்தி கரும்பு விவ​சா​யிகள் கடந்த 31-ம் தேதி பெல​கா​வி​யில் தொடர் போராட்​டம் தொடங்​கினர். பெல​கா​வி, பாகல்​கோட்​, விஜயபுரா ஆகிய மாவட்​டங்​களில் உள்ள சர்க்​கரை ஆலைகளுக்கு எதிரில் விவ​சா​யிகள் 7-வது நாளாக நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ள​தால் அந்த ஆலைகள் முடங்​கும் நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளன.

பெல​காவி மாவட்​டத்​தில் நேற்று ஆயிரக்​கணக்​கான விவ​சா​யிகள் தேசிய நெடுஞ்​சாலைகளை மறித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தால் அங்கு போக்​கு​வரத்து வெகு​வாக பாதிக்​கப்​பட்​டது. இந்த போராட்​டத்​துக்கு ஆதர​வாக அதானி, சிக்​கோடி, குர்​லாபு​ரா,
கோகாக் ஆகிய பகு​தி​களில் வியா​பாரி​கள் தாங்​களாக முன்​வந்து கடைகளை அடைத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x