Published : 06 Nov 2025 07:54 AM
Last Updated : 06 Nov 2025 07:54 AM

பிஆர்எஸ் கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்த கேசிஆர்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் குற்றச்சாட்டு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைத​ரா​பாத் ஜூப்ளி ஹில்ஸ் சட்​டப்​பேரவை தொகு​திக்கு விரை​வில் இடைத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் ஆளும் காங்​கிரஸ், பாஜக, பிஆர்​எஸ் கட்​சிகளுக்கு இடையே மும்​முனைப் போட்டி நில​வு​கிறது.

இந்​நிலை​யில் ஜூப்ளி ஹில்ஸ் சிறு​பான்​மை​யினர் சங்​கத்​தினர் நேற்று முதல்​வர் ரேவந்த் ரெட்​டியை சந்​தித்து காங்​கிரஸ் கட்​சிக்கு ஆதரவு தெரி​வித்​தனர். அப்​போது ரேவந்த் ரெட்டி பேசி​ய​தாவது:

ராகுல்​காந்தி பாத​ யாத்​திரை மேற்கொண்டபோது காங்​கிரஸ் மட்​டுமே சிறு​பான்​மை​யினர் நலனில் அக்​கறை செலுத்​தும் கட்சி என பெரு​மை​யுடன் கூறி​னார். அதை எங்​கள் அரசு செயல்​படுத்தி வரு​கிறது.

ஆனால் முன்​னாள் முதல்​வ​ரான கே.சந்​திரசேகர ராவ், தனது பிஆர்​எஸ் கட்​சியை பாஜக​விடம் அடமானம் வைத்​து​விட்​டு, சிறு​பான்​மை​யினரை ஏமாற்றி வரு​கிறார். காலேஸ்​வரம் அணை ஊழல் வழக்கை சிபிஐ-​யிடம் ஒப்​படைத்து 3 மாதங்​கள் ஆகிறது. இவ்​வழக்​கில் இது​வரை எந்த முன்​னேற்​ற​மும் இல்​லை.

ஃபார்​முலா இ-கார் ரேஸ் வழக்​கில், கே.டி.​ரா​மா​ராவை கைது செய்ய ஆளுநர் இது​வரை அனு​மதி வழங்​க​வில்​லை. பாஜக- பிஆர்​எஸ் இடையே ஒப்​பந்​தம் இல்​லா​விடில் இது​போல் நடக்க வாய்ப்​பில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x