Published : 06 Nov 2025 05:23 AM
Last Updated : 06 Nov 2025 05:23 AM

பிஹாரில் 160 - 180 இடங்களில் என்டிஏ வெற்றி பெறும்: மத்திய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை

பாட்னா: மத்​திய அமைச்​சர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

பிஹார் தேர்​தலில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் அலை​தான் வீசுகிறது. மொத்தம் உள்ள 243 தொகு​தி​களில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி 160 முதல் 180 இடங்​களை கைப்​பற்​றும். பிரதமர் மோடி ஏன் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​படு​கிறார் என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கேட்​கிறார்? பிரதமர் ஏன் பிரச்​சா​ரத்​தில் ஈடு​படக்​கூ​டாது என்று நான் கேட்​கிறேன்?

ஜனநாயகத்​தின் கொண்​டாட்​டம்​தான் தேர்​தல். மக்​களு​டன் தொடர்​பில் இருப்​பது ஒவ்​வொரு அரசி​யல் கட்​சிகளின் பொறுப்​பாகும். எதிர்க்​கட்​சிகள் ஒவ்​வொரு முறையும் பிரதமர் மோடி, அவரது தாயாரை இழி​வுபடுத்​தும்​போதும் நாட்டு மக்​கள் தாமரையை மலரச் செய்​துள்​ளனர். இந்த முறை​யும் அப்​படியே நடக்​கும்.

மெகா கூட்​ட​ணி​யால் நல்​லாட்​சி​யைத் தர முடி​யாது. நல்​லாட்சி வேண்​டுமா அல்​லது காட்​டாட்சி வேண்​டுமா என்​பதை பிஹார் மக்​கள்​தான் முடிவு செய்​ய​ வேண்​டும். இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x