Published : 05 Nov 2025 12:45 AM
Last Updated : 05 Nov 2025 12:45 AM

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் துபாயில் கைதான ரவி உப்பல் காணவில்லை: இந்தியாவுக்கு அழைத்து வருவதில் பின்னடைவு 

புதுடெல்லி: ம​காதேவ் சூதாட்ட செயலி வழக்​கில் துபா​யில் கைது செய்​யப்​பட்ட ரவி உப்​பலை காண​வில்லை என தகவல் வெளி​யாகி உள்​ளது.

சத்​தீஸ்​கர் மாநிலத்​தைச் சேர்ந்த சவுரப் சந்​திரகர் மற்​றும் ரவி உப்​பல் ஆகிய இரு​வரும் இணைந்து கடந்த 2018-ம்ஆண்டு ‘மகாதேவ்' என்ற சூதாட்ட செயலியை அறி​முகம் செய்​துள்​ளனர். இதன் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி சம்​பா​தித்​துள்​ளனர். இவர்​கள் காவல் துறை​யினர், அரசு அதி​காரி​கள், அரசி​யல்​வா​தி​களு​டன் தொடர்​பில் இருந்​ததுடன், அவர்​களுக்கு அவ்​வப்​போது லஞ்​சம் வழங்கி வந்​துள்​ளனர்.

குறிப்​பாக, சத்​தீஸ்​கர் மாநில முன்​னாள் முதல்​வரும் காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான பூபேஷ் பாகேல் தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக ரூ.508 கோடி வாங்​கிய​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக சிபிஐ மற்​றும் அமலாக்​கத் துறை சார்​பில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்​கில் ரவி உப்​பலுக்கு எதி​ராக ரெட் கார்​னர் நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, ரவி உப்​பல் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் ஐக்​கிய அரபு அமீரகத்​தின் (யிஏஇ) துபா​யில் கைது செய்​யப்​பட்​டார். எனினும், 45 நாட்​களுக்​குப் பிறகு நிபந்​தனை ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார். இதற்​கிடையே அவரை நாடு கடத்​து​மாறு இந்​தியா கோரிக்கை வைத்​திருந்​தது. இதையடுத்​து, அரசின் கண்​காணிப்​பில் இருந்து வந்​தார்.

இந்​நிலை​யில், ரவி உப்​பலை காண​வில்லை என தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும் அவரை இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தும் பணி நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. உப்​பல் ஐக்​கிய அரபு அமீரகத்தை விட்டு வெளி​யேறி​விட்​ட​தாக கூறப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x