Published : 29 Oct 2025 07:23 AM
Last Updated : 29 Oct 2025 07:23 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மவுன்ட் அபு அருகில் உள்ள சியாவாவில் உள்ள 'ஹேப்பி டே' ஓட்டலுக்கு குஜராத்தை சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள் சாப்பிட வந்தனர். அவர்கள் பல்வேறு அறுசுவை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஆனால் பில் தொகை ரூ.10,900-ஐ செலுத்தாமல், கழிப்பறைக்கு செல்வது போல் ஒருவர் பின் ஒருவராக உணவகத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.
இதற்கிடையில் என்ன நடக்கிறது என்பதை ஓட்டல் உரிமையாளரும் பணியாளரும் உணர்ந்தனர். அவர்களின் கார், குஜராத் - ராஜஸ்தான் எல்லையான அம்பாஜியை நோக்கி செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டின.
இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் போக்குவரத்து நெரிசலுக்கு இடையில் சுற்றுலாப் பயணிகளின் காரை துரத்திச் சென்றனர். குஜராத் எல்லையில் அவர்களை மடக்கிப் பிடித்தனர். பிறகு போலீஸார் உதவியுடன் 5 பேரும் அதே இடத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கள் நண்பர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து, அவர் மூலம் ஆன்லைனில் ஓட்டல் பில்லை செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT