Published : 28 Oct 2025 08:10 AM 
 Last Updated : 28 Oct 2025 08:10 AM
மும்பை: மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டம் பல்தி கிராமத்துக்கு அருகில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அகமதாபாத் - ஹவுரா விரைவு ரயில் மோதியதில் 16-17 வயதுடைய 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
இவர்கள் இருவரும் பிரஷாந்த், ஹர்ஷவர்தன் என அடையாளம் காணப்பட்டனர். இந்த விபத்து குறித்து ரயிலின் லோகோ பைலட் அருகில் உள்ள பல்தி ரயில் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிறுவர்கள் இவரும் காதில் ஹெட்போன் அணிந்து கொண்டு தண்டவாளத்தில் அமர்ந்திருந்ததாகவும் தொடர்ந்து ஒலி எழுப்பியும் அவர்கள் எழுந்து செல்லவில்லை எனவும் லோகோ பைலட் கூறியுள்ளார்.
ஹெட்போன் அணிந்திருந்ததால் ரயில் சத்தத்தை அவர்கள் கவனிக்காமல் இருந்திருக்கலாம். இவர்கள் இருவரும் விபத்துக்கு பகுதிக்கு 300 மீட்டர் தொலைவில் உள்ள காலனியை சேர்ந்தவர்கள். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த விபத்து குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT