Published : 28 Oct 2025 08:06 AM 
 Last Updated : 28 Oct 2025 08:06 AM
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
நமது ஆட்சியில் ஃபைசாபாத் நகரம் அயோத்தி என பெயர் மாற்றப்பட்டது. அதேபோல் அலகாபாத் நகரம் பிரயாக்ராஜ் என மாற்றப்பட்டது. தற்போது முஸ்தபாபாத் நகரத்தை கபீர் தாம் என பெயர் மாற்றம் செய்யப் போகிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பாஜக தலைமையிலான அரசுகள், நமது நாட்டில் உள்ள மிகவும் அழகான, மத முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை மீட்டெடுத்து வருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இது.
நமது ஒற்றுமையைக் குலைக்க, சில சக்திகள் உருவாகி வருகின்றன. அதுபோன்றவர்களிடம் நாம் உஷாராக இருக்கவேண்டும். சாதி என்ற பெயரால் நம்மிடையே பிரிவினையை உருவாக்க முயலும் சக்திகளிடம் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தேசப்பற்றுதான் தீர்வாக இருக்க முடியும். இந்த இடம் சாதாரண பூமியல்ல. இது நமது தாய்நாடு, தந்தை நாடு. நாட்டுக்காக சேவை செய்வது உண்மையாகவே கடவுளுக்கு செய்யும் தொண்டாகும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT