Published : 28 Oct 2025 07:53 AM
Last Updated : 28 Oct 2025 07:53 AM

டிஜிட்டல் கைது வழக்குகளை சிபிஐக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிசீலனை

புதுடெல்லி: போலி​யான நீதி​மன்ற ஆவணங்​களை காட்டி நடை​பெறும் டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் தொடர்பாக தாமாக முன்​வந்து பதிவு செய்த வழக்கை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்சி அடங்​கிய அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த விவ​காரம் தொடர்​பாக, மத்​திய அரசு, சிபிஐ பதில் அளிக்க உத்​தர​விட்​டிருந்த நிலை​யில் இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மத்​திய அரசின் அட்​டர்னி ஜெனரல் ஆர். வெங்​கடரமணி, சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, டிஜிட்​டல் கைது முறை​கேடு​களை செய்​யும் கும்​பல் பல நேரங்​களில் மியான்​மர், தாய்​லாந்து போன்ற வெளி​நாடு​களில் இருந்து இயங்கி வரு​வதை​யும், இது​போன்ற வழக்​கு​களை சிபிஐ ஏற்​கெனவே விசா​ரித்து வரு​வதை​யும் குறிப்​பிட்​டனர்.

இதை ஏற்ற உச்ச நீதி​மன்​றம், இ்ந்த விவ​காரம் தொடர்​பாக மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​கள் பதில் அளிக்க உத்​தர​விட்​டனர். பதில் மனுவை பரிசீலித்த பிறகு டிஜிட்​டல் கைது முறை​கேடு வழக்​கு​கள் அனைத்​தை​யும் சிபிஐக்கு மாற்றி உச்ச நீதி​மன்​றம்​ உத்​தர​விடும்​ என எதிர்​​பார்​க்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x