Published : 28 Oct 2025 07:47 AM
Last Updated : 28 Oct 2025 07:47 AM

ஏஐ ஆபாச புகைப்படம், வீடியோவை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்டியதால் இளைஞர் தற்கொலை

பரிதாபாத்: சகோ​தரி​களு​டன் நெருக்​க​மாக இருப்​பது போல் ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட படங்​களை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்​டிய​தால் இளைஞர் ஒரு​வர் தற்​கொலை செய்து கொண்​டார்.

ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத் நகரைச் சேர்ந்த ராகுல் பாரதி (19) கல்​லூரி​யில் இரண்​டாம் ஆண்டு பயின்று வந்​தார். இவர் கடந்த சனிக்​கிழமை சில மாத்​திரைகளை சாப்​பிட்​டுள்​ளார். இதனால் உடல்​நிலை மோசமடைந்​துள்​ளது. இதையடுத்து அவரை பெற்​றோர் மருத்​து​வ​மனைக்கு அனைத்​துச் சென்​றனர். ஆனால் ராகுல் இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து ராகுலின் தந்தை மனோஜ் பாரதி காவல் நிலை​யத்​தில் புகார் செய்​துள்​ளார். அதில், “யாரோ சிலர் என் மகனின் செல்​போனை ஹேக் செய்து அதிலிருந்த என் 3 மகள்​கள் மற்​றும் ராகுலின் புகைப்​படங்​களை எடுத்​துள்​ளனர். பின்​னர் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பம் மூலம் ராகுலும் என் மகள்​களும் நெருக்​க​மாக இருப்​பது​போன்ற புகைப்​படம் மற்​றும் வீடியோக்​களை உரு​வாக்கி உள்​ளனர். இதை என் மகனிடம் காட்டி பணம் தரா​விட்​டால் அனைத்​தை​யும் சமூக வலை​தளங்​களில் பதிவேற்​றம் செய்​து​விடு​வோம் என மிரட்டி உள்​ளனர். இதனால் கடந்த 2 வாரங்​களாக ராகுல் விரக்​தி​யுடன் இருந்​தார். சரி​யாக சாப்​பிட​வில்​லை" என கூறப்​பட்​டுள்​ளது.

இதன் அடிப்​படை​யில் சாஹில் மற்​றும் நீரஜ் பார்தி ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீ​ஸார், ராகுலின் செல்​போனை கைப்​பற்றி ஆய்வு செய்து வரு​கின்​றனர். அதில் சாஹில் என்​பவர் ராகுலுடன் அடிக்​கடி வீடியோ காலில் பேசி உள்​ளார். அத்​துடன் வாட்​ஸ்​-அப் உரை​யாடலை பரிசோ​தித்​த​போது, ராகுல், தனது சகோ​தரி​களு​டன் நெருக்​க​மாக இருப்​பது போன்ற ஏஐ வீடியோக்​களை அனுப்பி பணம் கேட்​டது தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து போலீ​ஸார் தொடர்ந்​து தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x