Published : 28 Oct 2025 07:39 AM
Last Updated : 28 Oct 2025 07:39 AM

பசவராஜ் விடுத்த அழைப்பால் சரணடைய முடிவு செய்தோம்: நக்சல் தலைவர் ரூபேஷ் தகவல்

புதுடெல்லி: நக்​சல் அமைப்​பின் மத்​திய குழு​வில் உறுப்​பினர்​களாக இருந்த தலை​வர்​கள் ரூபேஷ், பூபதி என்ற சோனு ஆகியோர் உட்பட பலர் சமீபத்​தில் போலீ​ஸார் முன் ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு சரணடைந்​தனர்.

இதனால் இவர்​கள் மீது மாவோ​யிஸ்ட் மத்​திய குழு துரோகி முத்​திரை குத்​தி​யது. இது குறித்து ரூபேஷ் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

பாது​காப்பு படை​யினருக்கு எதி​ரான தாக்​குதலை நிறுத்​தி​விட்​டு, மத்​திய அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வது குறித்து ஆராய வேண்​டும் என நக்​சலைட் உறுப்​பினர்​களுக்கு மறைந்த பொதுச் செய​லா​ளர் பசவ​ராஜ் அழைப்பு விடுத்​தார்.

இது தொடர்​பாக ஆலோ​சிக்க அரசிடம் நேரம் கோரப்​பட்டது. ஆனால், இத்​திட்​டம் பலனளிக்கும் முன்​பே, என்​க​வுன்ட்டரில் பசவ​ராஜ் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். ஆனால், நக்சலைட்​டு​களின் எதிர்காலத்​துக்கு ஆயுதங்​களை கீழே​போட்​டு​விட்டு மத்​திய அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வது​தான் சிறந்​தது என அவர் கூறி வந்​தார். அதனால் சரணடைந்தோம். இவ்​வாறு ரூபேஷ்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x