Published : 25 Oct 2025 08:59 AM
Last Updated : 25 Oct 2025 08:59 AM

நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக முடியாது: தேஜஸ்வி யாதவ் கருத்து

பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி (என்​டிஏ) மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால் நிதிஷ்கு​மார் முதல்​வ​ராக முடி​யாது என்று ஆர்​ஜேடி கட்​சி​யின் தலை​வர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார். பிஹார் மாநிலத்​தில் நவம்​பர் மாதம் 6 மற்​றும் 11-ம் தேதி​களில் சட்​டப் பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் சஹர்சா மாவட்​டத்​தில் உள்ள சிம்ரி பக்​தி​யார்​பூரில் நேற்று நடை​பெற்ற பேரணி​யில் முன்​னாள் துணை முதல்​வரும், ராஷ்ட்​ரிய ஜனதா தள கட்​சித் தலை​வரு​மான தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு பேசி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது:

சட்​டப் பேர​வைத் தேர்​தலுக்​குப் பிறகு தேர்ந்​தெடுக்​கப்​பட்ட எம்​எல்​ஏக்​களால் முதல்​வர் தேர்வு செய்​யப்​படு​வார் என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெளி​வாக தெரி​வித்​து​விட்​டார். இதனால்
என்​டிஏ கூட்​ட​ணிக்கு மக்​கள் வாக்​களித்து மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால் தற்​போதைய முதல்​வர் நிதிஷ் குமார் மீண்​டும் முதல்​வ​ராக முடி​யாது.

தேசிய ஜனநாயக கூட்​டணி மத்​தி​யில் 11 ஆண்​டு​களாக​வும், 20 ஆண்​டு​கள் மாநிலத்​தி​லும் ஆட்சி செய்த போதி​லும், பிஹார் மாநிலம் ஏழ்​மை​யாக​ உள்ளது. இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x