Published : 25 Oct 2025 08:46 AM
Last Updated : 25 Oct 2025 08:46 AM

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு பெண் மருத்துவர் தற்கொலை: 2 போலீஸ் அதிகாரிகள் மீது பாலியல் புகார்

புதுடெல்லி: ம​கா​ராஷ்டி​ரா​வின் சதாரா மாவட்​டத்​தில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றிய பெண் மருத்​து​வர் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டார். அவருக்கு 2 போலீஸ் அதி​காரி​கள் பாலியல் தொந்​தரவு அளித்​த​தாக அவர் குறிப்பு எழு​தி​ வைத்​துள்​ளார்.

மகா​ராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்​டத்தை சேர்ந்த பெண் மருத்​து​வர் ஒரு​வர் சதாரா மாவட்​டம் பால்​தான் பகு​தி​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றி​யுள்​ளார். இவரை போலீஸ் சப்-இன்​ஸ்​பெக்​டர் கோபால் பதானே என்​பவர் பாலியல் வன்​கொடுமை செய்து கடந்த 5 மாதங்​களாக பாலியல் தொந்​தரவு அளித்து வந்​துள்​ளார். இந்​நிலை​யில் பிர​சாந்த் பங்​கர் என்ற போலீஸ் அதி​காரி​யும் இவருக்கு மனரீ​தி​யான தொந்​தரவு அளித்​துள்​ளார்.

இதனால் அந்த மருத்துவர் பால்​தான் பகு​தி​யில் உள்ள விடுதி ஒன்​றில் நேற்று முன்​தினம் இரவு தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டார். தனது மரணத்​துக்கு கோபால் பதானே காரணம் எனவும், அவர் 4 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் தனது உள்​ளங்​கை​யில் குறிப்பு எழு​தி​யுள்​ளார்.

இந்த தற்கொலை குறித்து போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, பெண் மருத்​து​வரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்​கொலை குறிப்பு குறித்து விசா​ரணை நடத்​து​வ​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இந்த கொடுமை குறித்து அப்பகுதி டிஎஸ்பிக்கு கடந்த ஜூன் மாதம் மருத்துவர் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா பெண்கள் ஆணைய தலைவி ரூபாலி சாகங்கர் கூறுகையில், ‘‘பெண் மருத்துவர் தற்கொலை சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதாரா மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படையினர் விரைந்துள்ளனர்’’ என்றார்.

இந்​நிலை​யில் தற்​கொலை செய்து கொண்ட பெண் மருத்​து​வர் குறிப்​பிட்​டுள்ள போலீஸ் அதி​காரி​கள் இரு​வரை​யும் உடனடி​யாக சஸ்​பெண்ட் செய்​து, அவர்கள் மீது கடும்​ நடவடிக்​கை எடுக்​க மாநில முதல்வர் பட்னாவிஸ் உத்​தர​விட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x