Last Updated : 23 Oct, 2025 08:07 PM

 

Published : 23 Oct 2025 08:07 PM
Last Updated : 23 Oct 2025 08:07 PM

இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு - பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டதை ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், "லாலு பிரசாத் யாதவின் 'காட்டாட்சி' மீண்டும் வந்தால், தேஜஸ்வி யாதவ் முதல்வர் முகமாக இருப்பார் என்று எப்போதும் எதிர்பார்க்கப்பட்டது. எனவே, அதில் புதியது என்ன?" என்று கூறினார்.

முன்னதாக இன்று பாட்னாவில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், இண்டியா கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், “இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை நாங்கள் ஆதரிக்கிறோம். இங்கே அமர்ந்திருக்கும் நாங்கள் அனைவரும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். அதேபோல், கூட்டணியின் துணை முதல்வர் வேட்பாளராக முகேஷ் சஹானி அறிவிக்கப்படுகிறார்” என தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை தேசிய ஜனநாயக கூட்டணி கடுமையாக விமர்சித்துள்ளது. பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகட்பந்தனில் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பிஹாரின் 243 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ‘பரிசுத்தமான பார்ட்டி’, ‘நல்லாட்சி நல்கப்போகும் கட்சி’, ‘பிஹார் அரசியலில் மக்கள் எதிர்பார்க்கும் முதல் மாற்று அரசியல் கட்சி’ என்றெல்லாம் தன்னை பிராண்டிங் செய்து வருகிறார் பிகே. அவரது பாதயாத்திரைகள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்​நிலை​யில், முதல் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஜன் சுராஜ் கட்​சி​யின் 3 வேட்​பாளர்​கள் முதுர் ஷா, சத்ய பிர​காஷ் திவாரி, சசி சேகர் சின்ஹா ஆகியோர் தங்​கள் வேட்பு மனுவை திடீரென திரும்பப் பெற்றனர். இதற்கு பாஜகவே காரணம் என பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x