Published : 21 Oct 2025 08:56 AM
Last Updated : 21 Oct 2025 08:56 AM
டெல்லியில் பிரபலமானதும் மிக பழமையானதுமான கன்டேவாலா பேக்கரிக்கு அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த கடைக்கு பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தினர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்காக இனிப்புகள் வாங்க அங்கு சென்ற ராகுல் காந்தி தன் கையாலேயே சில இனிப்பு வகைகள் செய்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கன்டேவாலா பேக்கரியின் உரிமையாளர் சுஷாந்த் ஜெயின், “ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்துதான் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள், அப்போதுதான் எங்களுக்கு ஸ்வீட் ஆர்டர் எங்களுக்கு கிடைக்கும் என்று அவரிடம் நான் கூறினேன்.
அவர் எங்கள் கடைக்கு வரும்போது, தன் கையாலேயே ஸ்வீட் செய்வதாக கூறினார். மறைந்த அவருடைய தந்தை ராஜிவ் காந்திக்கு இமார்தி (ஜிலேபி வகை) மிகவும் பிடிக்கும். நீங்கள் அதை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று ராகுலிடம் கூறினேன். அவருக்கு பெசன் லட்டுகளும் பிடித்திருந்தது. அந்த இரண்டையும் அவரே தன் கையால் செய்தார்” என்று தெரிவித்தார்.
पुरानी दिल्ली की मशहूर और ऐतिहासिक घंटेवाला मिठाइयों की दुकान पर इमरती और बेसन के लड्डू बनाने में हाथ आज़माया।
सदियों पुरानी इस प्रतिष्ठित दुकान की मिठास आज भी वही है - ख़ालिस, पारंपरिक और दिल को छू लेने वाली।
दीपावली की असली मिठास सिर्फ़ थाली में नहीं, बल्कि रिश्तों और समाज… pic.twitter.com/bVWwa2aetJ— Rahul Gandhi (@RahulGandhi) October 20, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT