Published : 20 Oct 2025 07:14 AM
Last Updated : 20 Oct 2025 07:14 AM

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊழியர் சஸ்பெண்ட்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் ரெய்ச்​சூர் மாவட்​டம் லிங்​சாகூரில் கடந்த 12-ம் தேதி நடந்த ஆர்​எஸ்​எஸ் நிகழ்​வில் பங்​கேற்ற சிர்​வார் வட்​டார மேம்​பாட்டு அதி​காரி பிர​வீன் குமார் நேற்று முன்தினம் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார்.

அவர் ஊரக வளர்ச்சி மற்​றும் பஞ்​சா​யத்து நிர்​வாகத்​துறை​யின் விதி​முறை​களை மீறிய​தால் இந்த நடவடிக்​கைக்கு ஆளாகி இருப்​ப​தாக அத்​துறை​யின் மாவட்ட‌ ஆணை​யர் அருந்​ததி சந்​திரசேகர் தெரி​வித்​தார்.

கர்​நாடக அரசின் இந்த நடவடிக்​கைக்கு பாஜக, ஆர்​எஸ்​எஸ், பஜ்ரங்தளம் உள்​ளிட்ட அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்​து உள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x