Published : 16 Oct 2025 08:37 AM
Last Updated : 16 Oct 2025 08:37 AM
பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கர்நாடக தகவல் தொழில்நுட்ப மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்துறை அமைச்சரும்,காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியாங்க் கார்கே அண்மையில் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், “ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பொது இடங்களில் பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது போல், கர்நாடகாவிலும் தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதையடுத்து இதற்கான நடவடிக்கை குறித்து ஆராயுமாறு, தலைமை செயலருக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார் இந்நிலையில் பிரியாங்க் கார்கே வெளியிட்ட அறிக்கையில், “ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சித்ததால் இதுவரை 500-க்கும் மேற்பட்ட மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்துள்ளன.
என்னை கொலை செய்து விடுவதாக சிலர் மிரட்டினர். எனது வீட்டுக்கு வெடிகுண்டு வைத்து விடுவதாகவும் மிரட்டினர். இத்தகைய மிரட்டலை கண்டு நான் அஞ்சவில்லை. சட்டப்படி இதனை கையாளப் போகிறேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT