Published : 14 Oct 2025 09:06 AM
Last Updated : 14 Oct 2025 09:06 AM
புதுடெல்லி: பிஎம் கிசான் திட்டத்தில் கணவனும், மனைவி இருவரும் பணம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த திட்டத்தின்படி குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே இந்த சலுகையை பெற தகுதியானவர். என்றாலும் கணவர், மனைவி என இருவருமே பயன்பெற்றுள்ளது மத்திய வேளாண் அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் 31.01 லட்சம் பயனாளிகள் குறித்து ஆராயப்பட்டது. அதில் 17.87 லட்சம் பேர் கணவன்-மனைவி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி குடும்பத்தில் ஒருவர்தான் பயனாளியாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இருப்பினும், கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் பணப் பலன்களை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுள்ளனர். இது விதிமுறைகளை மீறிய செயலாகும்.
இதையடுத்து, மத்திய வேளாண் அமைச்சகம் தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுகுறித்து அனுப்பியுள்ள கடி
தத்தில் அக்டோபர் 15-ம் தேதிக்குள் பயனாளிகள் குறித்த சரிபார்ப்புப் பணிகளை முடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விவசாயிகளின் குடும்ப நிதி தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு பிஎம் கிசான் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 ஒவ்வொரு விவசாய குடும்பத்துக்கும் வழங்கப்படுகிறது. இது, நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT