Published : 11 Oct 2025 12:48 AM
Last Updated : 11 Oct 2025 12:48 AM
போபால்: மத்திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடந்த வாகன சோதனையின்போது பந்தோல் காவல் நிலையை பொறுப்பாளர் மற்றும் காவலர்கள் ஒரு நான்கு சக்கர வாகனத்தை வழிமறித்துள்ளனர்.
அப்போது அதில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள கட்னியில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள ஜல்னாவிற்கு ஒரு பெரிய அளவிலான தொகை கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ஹவாலா பணம் என சந்தேகப்பட்ட போலீஸார் அதனை பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, ஓட்டுநரை அடித்து விரட்டி விட்டு அந்தப் பணத்தை தாங்களே அபகரித்துக் கொண்டனர்.
பணத்தை அனுப்பிய தொழிலதிபரும், ஓட்டுநரும் போலீஸில் புகார் அளித்ததை அடுத்து ஐஜி பிரமோத் வர்மா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்தொடர்ச்சியாக , பந்தோல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அர்பித் பைராம் உட்பட 9 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
முதல்கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட பணம் ரூ.1.45 கோடி என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், அந்த நான்கு சக்கர வாகனத்தில் ரூ.2.96 கோடிக்கு மேல் இருந்ததாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT