Published : 10 Oct 2025 07:39 AM
Last Updated : 10 Oct 2025 07:39 AM

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு

கோனசீமா: ஆந்​தி​ரா​வின் கோனசீமா மாவட்​டம், ராய​வரம் கணபதி மைதானத்​தில் தீபாவளி பண்​டிகைக்​காக பட்​டாசுகளை பார்​சல் செய்து அனுப்​பும் பணி நடை​பெறுகிறது. இங்கு புதன்​கிழமை திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது.

இதில் 4 பெண்​கள் உட்பட 6 தொழிலா​ளர்​கள உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதில் 4 பேரின் நிலைமை மோச​மாக இருந்​தது.

இந்​நிலை​யில், மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயி​ரிழந்​தனர். ஒட்​டுமொத்த உயி​ரிழப்பு 8 ஆக உயர்ந்​திருக்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x