Published : 10 Oct 2025 07:34 AM
Last Updated : 10 Oct 2025 07:34 AM

பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட பப்பர் கல்சா தீவிரவாதிகள் பஞ்சாப் மாநிலத்தில் கைது

சண்​டிகர்: பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்​பின் ஆதர​வுடன் பஞ்​சாபில் ரகசி​ய​மாக செயல்​பட்ட பப்​பர் கல்சா தீவிர​வா​தி​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

கடந்த 1978-ம் ஆண்​டில் பப்​பர் கல்சா தீவிர​வாத அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த 1985-ம் ஆண்டு ஏர் இந்​தியா விமான குண்​டு​வெடிப்​பு, 1985-ம் ஆண்டு ஜப்​பானின் நரிடா சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் ஏர் இந்​தியா விமானத்​தின் மீதான தாக்​குதல் உட்பட பல்​வேறு தீவிர​வாத செயல்​களில் பப்​பர் கல்​சாவுக்கு தொடர்பு உள்​ளது. அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​களில் பப்​பர் கல்சா இன்​டர்​நேஷனல் அமைப்பு திரைமறை​வில் செயல்​பட்டு வரு​கிறது.

இந்த சூழலில் பஞ்​சாபின் ஜலந்​தரில் பப்​பர் கல்​சாவை சேர்ந்த 2 தீவிர​வா​தி​கள் நேற்று கைது செய்​யப்​பட்​டனர். முதல்​கட்ட விசா​ரணை​யில் அவர்​கள் நிஷான் ஜூரியன், ஆதேஷ் ஜமா​ராய் என்​பது தெரிய​வந்​துள்​ளது.

இரு​வரும் தங்​கி​யிருந்த வீட்​டில் இருந்து 2.5 கிலோ வெடிபொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்டு உள்​ளன. பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்​பின் ஆதர​வுடன் இரு​வரும் ரகசி​ய​மாக நாசவேலைகளில் ஈடுபட திட்​ட​மிட்டு இருந்​தனர்.

இதுகுறித்து பஞ்​சாப் போலீ​ஸார் கூறுகையில், “பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு சார்​பில் பஞ்​சாப் மாநிலத்​துக்​குள் ஆயுதங்​கள், போதை பொருட்​கள் கடத்​தப்​பட்டு வரு​கின்​றன. கடந்த புதன்​கிழமை பெரோஸ்பூர் பகு​தி​யில் 5 கிலோ போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இதுதொடர்​பாக ஐஎஸ்ஐ அமைப்​போடு தொடர்​புடைய சஜன், ரேஷாம் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர்.

இதைத் தொடர்ந்து ஜலந்​தரில் ஆர்​டிஎக்ஸ் வெடிபொருட்​களு​டன் நிஷான் ஜூரியன், ஆதேஷ் ஜமா​ராய் ஆகியோர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர். பாகிஸ்​தானின் சதி​களை நாங்​கள் வெற்​றிகர​மாக முறியடித்து வரு​கிறோம்” என்றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x