Published : 09 Oct 2025 07:14 AM
Last Updated : 09 Oct 2025 07:14 AM

நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

மும்பை: மும்​பையைச் சேர்ந்த தீபக் கோத்​தாரி என்ற தொழில​திபரை ஏமாற்றி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்​கில் நடிகை ஷில்பா ஷெட்​டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோ​ருக்கு லுக் அவுட் சர்க்​குலர் (எல்​ஓசி) நோட்​டீஸ் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் அமெரிக்கா செல்ல அனு​மதி கேட்டும் லுக் அவுட் சர்க்​குலர் நோட்​டீஸை ரத்து செய்​ய​வும் கோரி மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் நடிகை ஷில்பா ஷெட்டி மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த மும்பை உயர் நீதி​மன்​றம், “முதலில் ரூ.60 கோடியை நீதி​மன்​றத்​தில் நடிகை ஷில்பா ஷெட்டி டெபாசிட் செய்​து​விட்டு வெளி​நாடு செல்​லலாம். மேலும், அவருக்கு எதி​ராக வழங்​கப்​பட்​டுள்ள லுக் அவுட் சர்க்​குலர் நோட்​டீஸை ரத்து செய்ய முடி​யாது. நடிகை ஷில்பா ஷெட்டி வெளி​நாடு செல்ல அனு​ம​திக்க முடி​யாது” என்று உத்​தர​விட்​டார். மேலும் வழக்கை வரும் 14-ம் தேதிக்கு அவர் தள்​ளிவைத்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x