Published : 09 Oct 2025 02:42 AM
Last Updated : 09 Oct 2025 02:42 AM

விவாகரத்து பெற்ற கணவன் பாலாபிஷேக கொண்டாட்டம்!

புதுடெல்லி: மனை​வி​யிட​மிருந்து விவாகரத்து பெற்​றதை பாலாபிஷேகம் செய்து கணவர் கொண்​டாடிய வீடியோ வைரலாகி வரு​கிறது.

டெல்​லியைச் சேர்ந்​தவர் பிராடர் டி.கே. பிராடருக்கு அவரது மனை​வி​யுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக விவாகரத்து கோரி நீதி​மன்​றத்​தில் மனு செய்​திருந்​தார்.

இந்​நிலை​யில் நீதி​மன்​றத்​திலிருந்து அவருக்கு அண்​மை​யில் விவாகரத்து கிடைத்​துள்​ளது. இதையடுத்து வீட்​டுக்கு வந்த அவருக்கு தாய், பாலால் அபிஷேகம் செய்​தார்.

இதுகுறித்து பிராடர் டி.கே. தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறும்​போது, “விவாகரத்து கிடைத்து விட்​டது. நான் இப்​போது தனி​யாக(சிங்​கிள்) இருக்​கிறேன். மகிழ்ச்​சி​யாக இருக்​கிறேன். மகிழ்ச்​சி​யான விவாகரத்​து. 120 கிராம் தங்​கம், 18 லட்​சம் ரொக்​கம் கொடுக்கவோ அல்​லது வாங்​கவோ இல்​லை.

இப்போது சுதந்​திர​மாக இருக்​கிறேன். எனது உலகம். எனது விதி​கள். தனி​யாக​வும், மகிழ்ச்​சி​யாக​வும் இருக்​கிறேன்” என்​றார். கடந்த மாதம் 25-ம் தேதி சமூக வலை​தளங்​களில் வெளி​யான இந்த வீடியோவை லட்​சக்​கணக்​கான மக்​கள் பார்த்து கருத்​துகளைத் தெரி​வித்து வரு​கின்​றனர்.

இது​வரை அந்த வீடியோவுக்கு 62 ஆயிரம் லைக்​கு​கள் வந்​துள்​ளன. 4 ஆயிரம் பேர் கருத்து தெரி​வித்​துள்​ளனர். 30 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் வீடியோவைப் பார்த்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x