Published : 07 Oct 2025 06:39 AM
Last Updated : 07 Oct 2025 06:39 AM

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் சஸ்பெண்ட்

தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய்

புதுடெல்லி: உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய் தலை​மையி​லான அமர்வு வழக்கு விசா​ரணைக்​காக நேற்று கூடியது. அப்​போது வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாயை நோக்கி வீசி உள்​ளார்.

ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் போலீ​ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். பின்னர் அவரை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது.

இந்த சம்​பவத்​தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்​பட்​டது. விசா​ரணை தடைபட்​டது. இதனிடையே, ‘‘சனாதன தர்​மத்தை அவம​திப்​பதை சகித்​துக் கொள்ள முடி​யாது’’ என கிஷோர் கோஷமிட்​ட​தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை நீதிபதி கவாய் கூறும்​போது, “இத​னால் கவனத்தை சிதற விடாதீர்​கள். இவை என்னை பாதிக்​க​வில்​லை’’ என்​றார்.

உச்ச நீதி​மன்​றத்​தில் ராகேஷ் தலால் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மத்​திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜவாரி கோயி​லில் சேதமடைந்த நிலை​யில் உள்ள விஷ்ணு சிலையை மறுநிர்​மாணம் செய்ய உத்​தர​விட வேண்​டும்’’ என கோரி​யிருந்​தார். இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அமர்​வில் கடந்த மாதம் விசா​ரணைக்கு வந்​ததது. அப்​போது, தலைமை நீதிபதி கூறும்​போது, “சிலை மறுநிர்​மாணம் பற்றி அந்த தெய்​வத்​திடமே கேளுங்​கள்’’ எனக் கூறி மனுவை தள்​ளு​படி செய்​தார்.

பிரதமர் மோடி கண்டனம்: பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உடன் தொலைபேசியில் பேசினேன். அவர் மீது நடந்த தாக்குதல் இந்தியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது’’ என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x