Published : 07 Oct 2025 06:35 AM
Last Updated : 07 Oct 2025 06:35 AM

இருமல் மருந்து விஷமாக மாறி 16 குழந்தைகள் உயிரைப் பறித்த கொடூரம்

இரு​மல் மருந்து சாப்பிட்ட 16 குழந்​தைகள் உயிழந்துள்ளனர். இதையடுத்து அந்த மருந்து விற்பனைக்கு 9 மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. மத்​திய பிரதேசம் சிந்த்​வாரா மாவட்​டத்​தில் கடந்த ஆகஸ்ட் மாதத்​தில் கோல்ட்​ரிப் இரு​மல் மருந்து காரண​மாக முதல் குழந்தை உயி​ரிழந்​தது. ஆனால், அடுத்த 15 நாட்​களுக்​குள் 5 வயதுகுட்​பட்ட ஆறு குழந்​தைகள் சிறுநீரக செயலிழப்​பால் அடுத்​தடுத்து உயி​ரிழந்தன.

சளி, இரு​மல், லேசான காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்ட குழந்​தைகளுக்கு மருத்​து​வர்​கள் இரு​மல் சிரப் உள்​ளிட்ட வழக்​க​மான மருந்​துகளை பரிந்​துரைத்​துள்​ளனர். ஆனால், அந்த மருந்தை எடுத்​துக்​கொண்ட பின்பு சில நாட்​களுக்​குள் அந்த குழந்​தைகளுக்கு சிறுநீர் வெளி​யேறு​வது குறைந்​தது. இதையடுத்​து, அவர்​களுக்கு சிறுநீரக தொற்று இருப்​பது கண்​டறியப்​பட்​டது. டயாலிசிஸ் கிகிச்சை தொடங்​கிய சில நாட்​களுக்​குள் குழந்​தைகள் அடுத்​தடுத்து இறந்​தனர்.

உயி​ரிழந்த குழந்​தைகளில் சிலர் மகா​ராஷ்டி​ரா, ராஜஸ்​தான் மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​களும் அடங்​கு​வர். பின்​னர் நடத்​தப்​பட்ட உடற்​கூ​ராய்​வில், குழந்​தைகளின் சிறுநீரகங்​களில் டைஎ​திலீன் கிளை​கோல் இருப்​பது கண்​டறியப்​பட்​டது. இது, விஷத்​துடன் தொடர்​புடைய ஒரு வகை நச்சு ரசாயன​மாகும். விசா​ரணை​யில் அந்த குழந்​தைகளுக்கு கோல்ட்​ரிப் மற்​றும் நெக்​ஸ்ட்​ரோ-டிஎஸ் சிரப்​பு​கள் வழங்​கப்​பட்​டது தெரிய​வந்​தது.

தமிழ்​நாட்​டின் காஞ்​சிபுரத்​தில் உள்ள ஸ்ரேசன் பார்​மாசூட்​டிகல்ஸ் தயாரித்த கோல்ட்​ரிப் என்ற இரு​மல் சிரப்பை அக்​டோபர் 2-ம் தேதி, தமிழ்​நாடு மருந்து கட்​டுப்​பாட்டு அதி​காரி​கள் பரிசோ​தித்​த​தில் அந்த மாதிரி​யில் கலப்​படம் இருப்​ப​தாக அறி​வித்​தனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x