Published : 05 Oct 2025 07:30 AM
Last Updated : 05 Oct 2025 07:30 AM

உ.பி.யில் 6,448 தடுப்பணைகள்: ஆதித்யநாத் பெருமிதம்

லக்னோ: உ.பி. தலைநகர் லக்​னோ​வில் தூய்மை கங்கை மற்​றும் கிராமப்​புற நீர் வழங்​கல் துறை​யின் மறு ஆய்வு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இந்தக் கூட்​டத்​துக்கு முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலைமை வகித்​துப் பேசி​ய​தாவது:

உ.பி.​யில் 1.28 லட்​சம் ஹெக்​டேர் நிலங்​கள் நீர்ப்​பாசன வசதி பெறும் வகை​யில் பரு​வ​கால ஆறுகள் மற்​றும் ஓடைகளின் குறுக்கே 6,448 தடுப்​பணை​கள் கட்​டப்​பட்​டுள்​ளன.

மாநிலத்​தில் தடுப்​பணை​கள், குளங்​கள் கட்​டு​வதை​யும் அவற்றை மீட்​டெடுப்​ப​தை​யும் ஒரு வெகுஜன இயக்​க​மாக அதி​காரி​கள் மாற்ற வேண்​டும். மக்​களின் கூட்​டுப் பங்​கேற்பு மூலம் இவை பெரிய அளவில் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். இவ்​வாறு யோகி ஆதித்​ய​நாத்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x