Published : 05 Oct 2025 07:00 AM
Last Updated : 05 Oct 2025 07:00 AM

மணிக்கு 7,400 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் 'த்வனி' ஹைப்பர்சோனிக் ஏவுகணை டிசம்பரில் சோதனை

புதுடெல்லி: மணிக்கு 7,400 கிமீ வேகத்​தில் சீறிப் பாயும் த்வனி ஏவு​கணை டிசம்​பரில் சோதனை செய்​யப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்ளன.

ஏவு​கணை தொழில்​நுட்​பத்​தில் ரஷ்​யா, அமெரிக்​கா, சீனா ஆகியவை முன்​னோடிகளாக உள்​ளன. இந்த நாடு​களுக்கு இணை​யாக இந்​தி​யா​வும் ஏவு​கணை தொழில்​நுட்​பத்​தில் அதிவேக​மாக முன்​னேறி வரு​கிறது. குறிப்​பாக இந்​தி​யா​வின் பிரம்​மோஸ் ஏவு​கணைக்கு உலகம் முழு​வதும் வரவேற்பு கிடைத்​திருக்​கிறது.

தற்​போது பிரம்​மோஸை​விட அதிவேக​மாக சீறிப் பாயும் த்வனி என்ற ஏவு​கணையை மத்​திய பாது​காப்பு ஆராய்ச்​சி மற்றும் மேம்​பாட்டு நிறு​வனம் (டிஆர்​டிஓ) தயாரித்து உள்​ளது. இந்த ஹைப்​பர்​சோனிக் ஏவு​கணை மணிக்கு 7,400 கி.மீ. வேகத்​தில் சீறிப் பாயும் திறன் கொண்​ட​தாகும். இதுகுறித்து டிஆர்​டிஓ வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

ஹைப்​பர்​சோனிக் ஏவு​கணை​கள் ஒலியை​விட 5 முதல் 6 மடங்கு வேகத்​தில் சீறிப் பாயும். இந்த வகை ஏவு​கணை முதலில் வானத்தை நோக்கி சுமார் 100 கி.மீ. தொலைவை தாண்டி செல்​லும். அதாவது வளிமண்​டலத்தை தாண்டி சென்​று​விடும். பின்​னர் விண்​வெளி​யில் இருந்து பூமியை நோக்கி சீறிப் பாய்ந்து நிர்​ண​யிக்​கப்​பட்ட இலக்கை மிகத் துல்​லிய​மாக தாக்கி அழிக்​கும். ஹைப்​பர்​சோனிக் ஏவு​கணை​களை ரேடாரில் கண்​டறிவது கடினம்.

தற்​போது ரஷ்​யா, அமெரிக்​கா, சீனா​விடம் மட்​டுமே ஹைப்​பர்​சோனிக் ஏவு​கணை​கள் உள்​ளன. இந்த வரிசை​யில் இந்​தி​யா​வும் இணைய இருக்​கிறது. இந்த ஏவுகணை 9 மீட்​டர் நீளம், 2.5 மீட்​டர் அகலம் கொண்​ட​தாகும். சுமார் 6,000 கி.மீ. முதல் 10,000 கி.மீ. தொலைவு வரையி​லான இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழிக்க முடி​யும். சர்​வ​தேச அரங்​கில் ரஷ்​யா​வின் அவான்​கார்​டு, அமெரிக்​கா​வின் டார்க் ஈகிள், சீனா​வின் டிஎப்​-இசட்​எப் ஆகிய ஹைப்​பர்​சோனிக் ஏவு​கணை​கள் மிக​வும் சக்​தி​ வாய்ந்​தவை என்று கருதப்​படு​கிறது. இந்த ஏவு​கணை​களுக்கு இணை​யாக த்வனி ஏவு​கணை உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் தயாரிக்​கப்​பட்டு இருக்​கிறது.

இதன்மூலம் எதிரி​களின் அணு ஆயுத அச்​சுறுத்​தல்​களை திறம்பட எதிர்​கொள்ள முடி​யும். மேலும் எதிரி​களின் போர்க்​கப்​பல் உட்பட எந்த இலக்​கை​யும் துல்​லிய​மாக தாக்கி அழிக்க முடி​யும். இந்த ஆண்டு இறு​திக்​குள் த்வனி ஏவு​கணை சோதனை செய்​யப்​படும். வரும் 2029-ல் இந்​திய ராணுவத்​தில் ஏவு​கணை சேர்க்​கப்​படும்.

அமெரிக்​கா​வின் தாட் வான் பாது​காப்பு கவசம், இஸ்​ரேலின் அயர்ன் டோம் வான் பாது​காப்பு கவசத்​தால்​கூட த்வனி ஏவு​கணையை இடைமறித்து அழிக்க முடி​யாது. இவ்​வாறு டிஆர்​டிஓ வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.த்வனி ஏவுகணையின் மாதிரி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x