Published : 05 Oct 2025 05:31 AM
Last Updated : 05 Oct 2025 05:31 AM

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் குறித்து அனைத்து கட்​சிகளின் தலை​வர்​களு​டன் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பாட்​னா​வில் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.

பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்​தில் நவம்​பரில் பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த சூழலில் தேர்​தல் ஆணை​யம் சார்​பில் பிஹார் தலைநகர் பாட்​னா​வில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று அனைத்து கட்சி கூட்​டம் நடை​பெற்​றது. இதில் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் விவேக் ஜோஷி, சுக்​பீர் சிங் சாந்து மற்​றும் மாநில தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் கலந்து கொண்​டனர்.

ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​ட​ணியை சேர்ந்த தலை​வர்​கள், பிர​தான எதிர்க்​கட்​சிகளான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் தலை​வர்​கள் கூட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தொடர்​பாக அனைத்து கட்​சிகளின் தலை​வர்​களு​டன் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் விரி​வான ஆலோ​சனை நடத்​தி​னார். அவர்​களின் கருத்​துகளை கேட்​டறிந்​தார்.

பிஹார் மாநில பாஜக தலை​வர் உமேஷ் குஷ்​வாகா கூறும்​போது, “பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை இரு கட்​டங்​களாக நடத்த வேண்​டும். புர்கா அணிந்து வரும் பெண்​களின் முக அடை​யாளத்தை உறுதி செய்ய வேண்​டும். மத்​திய பாது​காப்பு படைகளை தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்த வேண்​டும்’’ என்று தெரி​வித்​தார்.

பாஜக​வின் கூட்​டணி கட்​சி​யான ஐக்​கிய ஜனதா தளத்​தின் மூத்த தலை​வர் சஞ்​சய் ஜா கூறும்​போது, “பிஹாரில் மாவோ​யிஸ்ட் தீவிர​வாத பிரச்​சினை கிடை​யாது. சட்​டம், ஒழுங்கு சீராக இருக்​கிறது. எனவே ஒரே கட்​ட​மாக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை நடத்த வேண்​டும்’’ என்று வலி​யுறுத்​தி​னார்.

பிஹார் மாநில காங்​கிரஸ் தலை​வர் ராஜேஷ் ராம் கூறும்​போது, “வாக்​காளர் இறுதிப் பட்​டியலில் புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் எத்​தனை பேர் நீக்​கப்​பட்டு உள்​ளனர்? புதி​தாக எத்​தனை பேர் சேர்க்​கப்​பட்டு உள்​ளனர்? எத்​தனை ஊடுரு​வல்​காரர்​கள் கண்​டறியப்​பட்​டனர் ஆகிய கேள்வி​களுக்கு தேர்​தல் ஆணை​யம் பதில் அளிக்க வேண்​டும். எங்​களுக்கு தேர்​தல் ஆணை​யம் உரிய பதில்​களை வழங்க வேண்​டும்’’ என்று கோரி​னார்.

ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலை​வர் அபய் குஷ்​வாகா கூறும்​போது, “வாக்​குப்​ப​தி​வின்​போது தாழ்த்​தப்​பட்ட மக்​களுக்கு போதிய பாது​காப்பு வழங்க வேண்​டும். தேர்​தல் முறை​கேடு​களை தடுக்க வேண்​டும்’’ என்று கோரிக்கை விடுத்​தார்.

சுமார் 3 மணி நேரம் பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​கள் தங்​கள் கருத்​துகளை எடுத்​துரைத்​தனர். இறு​தி​யில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் கூறும்​போது, “அனைத்து கட்​சிகளின் கருத்​துகள் பரிசீலனை செய்​யப்​பட்டு உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்’’ என்று உறுதி அளித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x