Published : 04 Oct 2025 07:36 AM
Last Updated : 04 Oct 2025 07:36 AM
பாட்னா: பிஹாரில் ஜோக்பானி - தனாபூர் இடையே அதிவேக வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் பூர்னியா- கஸ்பா ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று அதிகாலையில் இந்த ரயில் வரும்போது, டீன்ஏஜ் மாணவர்கள் 5 பேர் ரயில் பாதையில் நின்று ரீல்ஸ் எடுத்துள்ளனர்.
அப்போது ரயில் மோதியதில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். ரயில்வே போலீஸார் இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வழியில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி ஒருவரும் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT