Published : 04 Oct 2025 07:04 AM
Last Updated : 04 Oct 2025 07:04 AM

பிஹார் பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆய்வு

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேந்​திர குமார்

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முன்​னேற்​பாடு​கள் குறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேந்​திர குமார் பாட்னா​வில் இன்று ஆய்வு மேற்​கொள்​கிறார். பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் நவ. 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்​தில் விரைவில் தேர்​தல் நடை​பெற உள்ளது.

இந்த சூழலில் தேர்​தல் முன்​னேற்​பாடு​கள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேந்​திர குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் விவேக் ஜோஷி, சுக்​பீர் சிங் சாந்து ஆகியோர் இன்று பிஹார் தலைநகர் பாட்னா செல்​கின்​றனர்.

அவர்​கள் இன்​றும் நாளை​யும் மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி மற்​றும் மூத்த அதி​காரி​களு​டன் முக்​கிய ஆலோ​சனை நடத்த உள்​ளனர். இதன் அடிப்​படை​யில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அட்​ட​வணை வெளி​யிடப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இதுகுறித்து பிஹார் அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: சாத் பண்​டிகை அக்​டோபர் 28-ம் தேதி நிறைவடைகிறது. இதன்​பிறகே தேர்​தல் நடத்​தப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த முறை​யும் இரு கட்​டங்​களாக வாக்​குப்​ப​திவு நடத்​தப்​படலாம். அக்​டோபர் 31 முதல் நவ. 2-க்​குள் முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறக்​கூடும். நவம்​பர் 5 முதல் 7-ம் தேதிக்​குள் 2-ம் கட்ட தேர்​தல் நடத்​தப்​படலாம். நவ.10-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெறலாம்.

பிஹாரில் மொத்​தம் 234 தொகு​தி​கள் உள்​ளன. என்​டிஏ கூட்​ட​ணி​யின் தொகு​திப் பங்​கீடு குறித்து வரும் 8-ம் தேதி டெல்​லி​யில் முக்​கிய ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற உள்​ளது. இதில் தொகு​திப் பங்​கீடு இறுதி செய்​யப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மெகா கூட்​ட​ணி​யின் தொகு​திப் பங்​கீடு விவ​காரத்​தில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி), காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இடையே தொடர்ந்து குழப்​பம் நீடிக்​கிறது. கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் 70 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு 19 தொகு​தி​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது.

எனவே வரும் தேர்​தலில் காங்​கிரஸுக்கு 70 தொகு​தி​களை ஒதுக்க ஆர்​ஜேடி கடும் ஆட்​சேபம் தெரி​வித்து வரு​கிறது. ஆனால் காங்​கிரஸ் 76 தொகு​தி​களை கோரி வரு​கிறது. மேலும் மெகா கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள விஐபி கட்சி, கம்​யூனிஸ்ட் கட்​சிகளும் அதிக தொகு​தி​களை கேட்பதால் குழப்​பம் நீடிக்​கிறது. இவ்​வாறு அரசி​யல்​ நோக்​கர்​கள்​ கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x