Published : 04 Oct 2025 06:51 AM
Last Updated : 04 Oct 2025 06:51 AM

பாடகர்  ஜுபின் கார்க் மரண வழக்கு: படகில் உடன் சென்ற 2 இசைக் கலைஞர்கள் கைது

புதுடெல்லி: அ​சாம் பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்​பாக, அவருடன் படகில் சென்ற 2 இசைக் கலைஞர்​களை கைது செய்து அசாம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க சிங்​கப்​பூர் சென்​றிருந்​தார். அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க ஒரு படகில் சென்​றுள்​ளார். கடலில் நீந்​தும் போது அவர் நீரில் மூழ்கி இறந்​தார். இச்​சம்​பவம் தொடர்​பாக ஜுபின் கார்க் மேலா​ளர் சித்​தார்த்த சர்​மா, நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர் சியாம்​கானு மகந்தா ஆகியோர் டெல்​லி​யில் கடந்த புதன் கிழமை கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்​கில் கொலை குற்​றச்​சாட்​டு​களை​யும் அசாம் சிஐடி போலீ​ஸார் சேர்த்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் ஜுபின் கார்க்​குடன், கடலுக்கு படகில் சென்ற இரண்டு இசை கலைஞர்​கள் சேகர்​ஜோதி கோசு​வாமி, அம்​ரித்​பிரவா மகந்தா ஆகியோரை அசாம் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்து விசா​ரணைக்​காக குவஹாட்டி அழைத்து வந்​தனர். அவர்​கள் 14 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பப்​பட்​டனர். அவர்​களிடம் சிறப்பு புல​னாய்வு குழு​ வி​சா​ரணை நடத்தி வரு​கின்றனர்​.

சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு: இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷியாம் கனு மகந்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கை என்ஐஏ அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். விசாரணையை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரவிட வேண்டும்’’ என ஷியாம் கனு மகந்தா கோரியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x