Last Updated : 03 Oct, 2025 07:03 AM

1  

Published : 03 Oct 2025 07:03 AM
Last Updated : 03 Oct 2025 07:03 AM

750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து மைசூருவில் தசரா ஜம்பு சவாரி ஊர்வலம்

மைசூரு தசரா விழாவின் இறுதி நாளான நேற்று ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெற்றது. 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க அதனை அபிமன்யூ யானை சுமந்து சென்ற போது கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் மலர் தூவி அம்மனை வணங்கினர்.

பெங்களூரு: கிபி 1610-ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்​வடி கிருஷ்ண​ராஜ உடை​யார் மன்​னர், போரில் வென்​றதை முன்னிட்டு விஜயதசமி காலக்​கட்​டத்​தில் தசரா விழாவை 10 நாட்​கள் கொண்​டாட தொடங்​கி​னார். கடந்த 1947-ல் நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு, கர்​நாடக அரசின் சார்​பில் அரசு விழா​வாக‌ தசரா கொண்​டாடப்​படு​கிறது.

415-வது ஆண்​டாக தசரா விழாவை புக்​கர் பரிசு வென்ற கன்னட எழுத்​தாளர் பானு முஸ்​தாக் கடந்த 22-ம் தேதி மைசூரு சாமுண்​டீஸ்​வரி அம்​மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்​தார். தசரா விழாவையொட்டி மைசூரு அரண்​மனை, சாமுண்​டீஸ்​வரி கோயில், கிருஷ்ண​ராஜ​சாகர் அணை, ரயில் நிலை​யம், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் உள்​ளிட்​டவை வண்ண மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டன‌.

கடந்த 9 நாட்​களும் உணவு திரு​விழா, திரைப்பட திரு​விழா, கிராமிய விழா, மலர்க் கண்​காட்​சி, பொருட்​காட்​சி, இசைக் கச்​சேரி, இலக்​கிய விழா மற்​றும் கன்னட கலை பண்​பாட்டை பறை​சாற்​றும் நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன.

தசரா திரு​விழா​வின் இறுதி நாளான நேற்று விஜய தசமியை முன்​னிட்டு நண்​பகல் 12.15 மணிக்கு மைசூரு அரண்​மனை​யில் உள்ள நந்​தி​கொடிக்கு முதல்​வர் சித்​த​ராமை​யா​வும், துணை முதல்​வர் டி.கே.சிவகு​மாரும் பூஜை செய்​தனர். மைசூரு அரண்​மனை​யில் பாரம்​பரிய முறைப்​படி நவராத்​திரி பூஜை செய்​து, மன்​னரும் பாஜக எம்​பி​யு​மான‌ யது​வீர் தனி​யார் தர்​பார் நடத்​தி​னார்.

இதைத் தொடர்ந்து முதல்​வர் சித்​த​ராமையா மாலை 4.40 மணிக்கு ‘ஜம்போ சவாரி’ என அழைக்​கப்​படும் யானை​களின் ஊர்​வலத்தை தொடங்கி வைத்​தார். 56 வயதான அபிமன்யூ யானை 750 கிலோ எடை கொண்ட தங்க அம்​பாரி​யில் சாமுண்​டீஸ்​வரி அம்​மன் வீற்​றிருக்​கும் சிலையை சுமந்து ராஜ வீதி​யில் ஊர்​வல​மாக சென்​றது.

இதை பின்​தொடர்ந்து ரூபா, காவேரி, ஸ்ரீகண்​டா, தனஞ்​செ​யா, மஹேந்​தி​ரா, கஜன், பீமா, ஏகலை​வா, லட்​சுமி உள்​ளிட்ட யானை​கள் அலங்​கரிக்​கப்​பட்டு கம்​பீர​மாக சென்​றன. ராஜவீ​தி​யில் தொடங்​கிய ஜம்பு சவாரி, பன்னி மண்​டபத்​தில் நிறைவடைந்​தது. கடந்த 10 நாட்​களும் கோலாகல​மாக நடை​பெற்ற மைசூரு தசரா திரு​விழா நேற்​றுடன் நிறைவடைந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x