Last Updated : 30 Sep, 2025 12:31 PM

6  

Published : 30 Sep 2025 12:31 PM
Last Updated : 30 Sep 2025 12:31 PM

காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் ட்ரம்ப்பின் திட்டம்: மோடி வரவேற்பு

புதுடெல்லி: காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் திட்டத்தை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஒருங்கிணைந்த திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது, பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேல் மக்களுக்கும், மேற்காசிய பிராந்தியத்துக்கும் நீடித்த நிலையான அமைதியை, பாதுகாப்பை, வளர்ச்சிக்கான பாதையை வழங்குகிறது.

சம்பந்தப்பட்ட அனைவரும் அதிபர் ட்ரம்ப்பின் முன் முயற்சிக்குப் பின்னால் ஒன்றிணைந்து மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்தும் இந்த முயற்சியை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் திட்டம் என்ன?: இஸ்​ரேல்​ - ஹ​மாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்தை அமெரிக்கா அறி​வித்​துள்​ளது. அமைதித் திட்​டத்​தில் இடம்​பெற்​றுள்ள முக்​கிய பிரிவு​கள்: காசா பகுதி தீவிரவாதம் இல்​லாத, அமை​தி​யான மண்​டல​மாக மாற்​றப்​படும். காசா மக்​களின் வாழ்க்​கைத் தரத்தை மேம்​படுத்​து​வதே இதன் முக்​கிய நோக்​கம்.

இரு தரப்​பும் இந்​தத் திட்​டத்தை ஒப்​புக்​கொண்​டால், உடனடி​யாக மோதல்​கள் நிறுத்​தப்​படும். இஸ்​ரேல் தனது நடவடிக்​கைகளை நிறுத்​தி, காசா​விலிருந்து படிப்​படி​யாக வெளி​யேறத் தொடங்​கும். பாலஸ்​தீனர்களை கொண்ட ஒரு குழு​வைக் கொண்டு காசா​வில் இடைக்​கால நிர்​வாகம் அமைக்​கப்​படும். அந்த அமைப்பே காசா​வில் அன்​றாட நிர்​வாகத்​தைக் கவனிக்​கும்.

அமெரிக்​கா​வின் தலை​மை​யில் அரபு மற்​றும் ஐரோப்​பிய நாடு​களைக் கொண்ட ஒரு புதிய சர்​வ​தேச குழு இதைக் கண்​காணிக்​கும். பாலஸ்​தீனிய ஆணை​யம் தனது சீர்​திருத்​தத் திட்​டத்தை முடிக்​கும் வரை காசா​வின் மறுசீரமைப்​புக்கு நிதி திரட்​டு​வது இக்​குழு​வின் பணியாகும்.

இந்​தத் திட்​டத்​துக்கு இஸ்​ரேல் சம்​மதம் தெரி​வித்த 48 மணி நேரத்​துக்​குள், உயிருடன் உள்ள மற்​றும் இறந்த அனைத்​துப் பிணைக் கைதி​களும் இஸ்​ரேல் வசம் ஒப்​படைக்​கப்​படு​வார்​கள். போர் உடனடி​யாக நிறுத்​தப்​படும். உள்ளிட்ட அம்​சங்​கள் இந்தப்பட்டியலில் இடம்​பெற்​றுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x