Published : 27 Sep 2025 08:41 AM
Last Updated : 27 Sep 2025 08:41 AM

அதிபர் புதினை பிரதமர் மோடி வற்புறுத்தியதாக நேட்டோ தலைவர் கூறுவது தவறு: மத்திய அரசு விளக்கம்

வெளி​யுறவுத்​துறை செய​லா​ளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால்

புதுடெல்லி: “இந்​தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரி ரஷ்​யாவை மறை​முக​மாக பாதிக்​கிறது. உக்​ரைன் விவ​காரத்​தில் தனது நிலைப்​பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்​புறுத்​தி​னார்” என நேட்டோ பொதுச் செயலா​ளர் மார்க் ரூட் கூறி​யிருந்​தார்.

இதுகுறித்து, வெளி​யுறவுத்​துறை செய​லா​ளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் கூறி​யிருப்​ப​தாவது: உக்​ரைன் விவ​காரத்​தில் தனது நிலைப்​பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்​புறுத்​தி​னார் என நேட்டோ பொதுச் செய​லா​ளர் மார்க் ரூட் கூறியது முற்​றி​லும் அடிப்​படை ஆதா​ரமற்​றது.

பிரதமர் மோடி பற்றி ஊகங்​கள் அடிப்​படையி​லான, கவனக்​குறை​வான கருத்தை ஏற்​றுக் கொள்ள முடி​யாது. இது​போல் அதிபர் புதினிடம், பிரதமர் மோடி பேச​வில்​லை. நேட்டோ போன்ற புகழ்​பெற்ற அமைப்​பின் தலைமை பொறுப்​பில் இருப்​பவர்​கள் சரி​யான தகவல்​களை தெரிவிக்க வேண்​டும் என எதிர்​பார்க்​கிறோம். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x