Published : 26 Sep 2025 06:56 AM
Last Updated : 26 Sep 2025 06:56 AM
பெங்களூரு: பத்ம பூஷன் விருதுபெற்ற கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா (94) உடல் நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் காலமானார் (94).
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சென்னப்பட்ணாவில் 1931-ல் பைரப்பா பிறந்தார். 20-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அவை கன்னடத்தில் இருந்து தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
எஸ்.எல்.பைரப்பாவின் எழுத்துப் பணிகளுக்காக சாகித்ய அகாடமி, பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் சரஸ்வதி சம்மான் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பைரப்பாவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ரவீந்திர கலாஷேத்ராவில் வைக்கப்பட்டிருந்த எஸ்.எல்.பைரப்பாவின் உடலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா உள்ளிட்டோர் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பைரப்பாவின் இறுதி சடங்குகள் இன்று மைசூருவில் நடைபெறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT