Published : 25 Sep 2025 09:12 AM
Last Updated : 25 Sep 2025 09:12 AM

மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்

லே: ல​டாக்​கில் மாநில அந்​தஸ்து கோரி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். 60-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். காஷ்மீரில் இருந்து லடாக் யூனியன் பிரதேசம் உரு​வாக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக லடாக் மக்​கள் தங்​கள் பகு​திக்கு மாநில அந்​தஸ்​தும் நிலம், கலாச்​சா​ரம் மற்​றும் வளங்​களை பாது​காக்​கும் வகை​யில் அரசி​யல் சாசன பாது​காப்​பும் கோரி வரு​கின்​றனர்.

லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​தும் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்​தார். இந்​நிலை​யில் அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகை​யில் லடாக்​கில் நேற்று முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ‘லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்​பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்​தது.

இந்​நிலை​யில் நேற்று லே நகரில் திரண்ட போராட்​டக்​காரர்​கள் அங்​குள்ள லடாக் மலைப்​பகுதி மேம்​பாட்டு தன்​னாட்சி கவுன்​சில் அலு​வல​கம் மற்​றும் பாஜக அலு​வல​கம் மீது தாக்​குதல் நடத்​தினர். மேலும் போலீ​ஸார் மீது கற்​களை வீசிய அவர்​கள், சிஆர்​பிஎப் வேன் உட்பட பல வாகனங்​களுக்கு தீவைத்து எரித்​தனர். இதையடுத்து போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும் கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசி​யும் வன்​முறை​யாளர்​களை விரட்​டினர். மேலும் கூடு​தல் படை​யினர் வரவழைக்​கப்​பட்டு நிலை​மையை கட்​டுக்​குள் கொண்டு வந்​தனர்.

இந்​நிலை​யில் இந்த கலவரத்​தில் 4 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 60-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். லே மாவட்​டத்​தில் 5 மற்​றும் அதற்கு மேற்​பட்​டோர் ஒன்று கூட​வும் அனு​ம​தி​யின்றி போராட்​டம் நடத்​த​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் கலவரம் காரண​மாக பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் தனது போராட்​டத்தை வாபஸ் பெற்​றார்.

“இது இளைஞர்​களின் கோபம், புரட்​சி. வன்​முறையை லடாக் இளைஞர்​கள் உடனடி​யாக நிறுத்த வேண்​டும். ஏனெனில் இது நமது நோக்​கத்​திற்கு தீங்கு விளைவிக்​கும், நிலை​மையை மேலும் மோச​மாக்​கும். லடாக்​கிலும் நாட்​டிலும் ஸ்திரமின்​மையை நாங்​கள் விரும்​ப​வில்​லை” என்று அவர் கூறி​னார்.

இந்​நிலை​யில் லடாக் போராட்​டத்​தில் காங்​கிரஸ் கவுன்​சிலர் பன்ட்​சாக் ஸ்டான்​சின் செபாக் வன்​முறையை தூண்​டிய​தாக பாஜக குற்​றம் சாட்​டி​யுள்​ளது. ஆனால் இதனை சோனம் வாங்​சுக் மறுத்​துள்​ளார். லடாக்​கில் மாநில அந்​தஸ்து கோரும் போராட்​டத்​தில் முதல்​முறை​யாக கலவரம் வெடித்​துள்​ளது. கோரிக்கை தொடர்​பாக அக்​டோபர்​ 6-ம்​ தேதி மீண்​டும்​ பேச்​சு​வார்​த்​தைக்​கு வரு​மாறு ல​டாக்​ பிர​தி​நி​தி​களை மத்​தி​ய அரசு அழைத்​துள்​ள நிலை​யில்​ அங்​கு கலவரம் ஏற்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x