Last Updated : 24 Sep, 2025 08:41 AM

3  

Published : 24 Sep 2025 08:41 AM
Last Updated : 24 Sep 2025 08:41 AM

பாஜக எம்.பி.யின் மனைவியிடம் டிஜிட்டல் கைது மோசடி செய்து பறித்த ரூ.14 லட்சத்தை மீட்ட கர்நாடக போலீஸார்

மனைவி பிரீத்தியுடன் சுதாகர்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் சிக்​கப்​பள்​ளாப்​பூர் மக்​கள​வைத் தொகுதி பாஜக எம்பி சுதாகர் பெங்​களூரு​வில் தனது மனைவி பிரீத்தி (40) மற்​றும் 2 குழந்​தைகளு​டன் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பிரீத்​திக்கு வாட்ஸ் அப் மூலம் மும்​பையை சேர்ந்த மர்ம நபர் ஒரு​வர் தொடர்பு கொண்​டார். தன்னை மும்பை இணைய குற்​றப்​பிரிவு போலீஸ் அதி​காரி எனக் கூறிய அவர், ‘‘உங்​களது எச்​.டி.எஃப்​.சி வங்கி கணக்​கில் சட்​ட​விரோத நபர்​களு​டன் பணப் பரிவர்த்​தனை நடந்​துள்​ளது.

அதி​லுள்ள பணத்தை உடனடி​யாக நாங்​கள் கூறும் 'யெஸ் வங்​கி' சோதனைக்​கான வங்​கிக் கணக்​கில் மாற்ற வேண்​டும். உடனடி​யாக மாற்​றா​விடில் சட்ட விரோத பணப் பரிவர்த்​தனைக்​காக உங்​களை கைது செய்​வோம்'' என மிரட்​டிள்​ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரீத்தி உடனடி​யாக தன் வங்கி கணக்​கில் இருந்த ரூ.14.26 லட்​சத்​தை, மர்ம நப‌ர் கூறிய வங்கி கணக்​குக்கு மாற்​றி​யுள்​ளார்.

அதன்​பிறகு தனது கணவரும் பாஜக எம்​.பி.​யு​மான சுதாகரிடம் இதனை தெரி​வித்​தார். அவர், 'இது டிஜிட்​டல் அரெஸ்ட் ஆன்​லைன் மோசடி​யாக இருக்​கலாம்' என கூறவே, பிரீத்தி பெங்​களூரு மேற்கு மண்டல துணை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​தார். இதையடுத்​து, போலீ​ஸார் சம்​பந்​தப்​பட்ட வங்​கிக் கணக்கு விவரங்​களை சேகரித்​தனர். யெஸ் வங்​கி​யின் தலைமை அலு​வல​கத்தை தொடர்​பு​கொண்​டு, அந்த வங்​கிக் கணக்கை உடனடி​யாக முடக்​கு​மாறு கூறினர். இதையடுத்து பிரீத்தி சுதாகர் இழந்த ரூ.14 லட்​ச​மும் மீட்​கப்​பட்​டு, ஒரு வாரத்​துக்​குள் அவரது வங்​கிக் கணக்​கில் வரவு வைக்​கப்​பட்​ட‌து.

உதவிய கோல்​டன் ஹவர்: இதுகுறித்து இணைய குற்​றத் தடுப்பு பிரிவு போலீ​ஸார் கூறுகை​யில், ''பணத்தை இழந்த பெண் உடனடி​யாக தேசிய சைபர் க்ரைம் ஹெல்ப் லைன் 1930-க்கு தொடர்​பு​கொண்டு தெரி​வித்​தார். இதையடுத்து போலீ​ஸார் 'கோல்​டன் ஹவர்'‍ (பொன்​னான நேரம்) எனும் நல்​வாய்ப்பை பயன்​படுத்தி அவரது பணத்தை வங்​கி​யிலேயே முடக்​கினர்.

கோல்​டன் ஹவர் என்​பது மோசடி செய்​பவர் அந்த மோசடி பரிவர்த்​தனையைத் தொடங்​கிய சில நிமிடங்​களில், பணம் முழு​மை​யாக அவரது வங்கி கணக்​குக்கு மாற்​றப்​படு​வதற்கு முன்​பான நேரம் ஆகும். அதி​கப்​பட்​சம் 10 முதல் 30 நிமிடங்​கள் இந்த நேரம் வங்​கி​களுக்கு ஏற்ப மாறு​படும். இந்த நேரத்​துக்​குள் புகார் அளிக்​கப்​பட்​டு, போலீ​ஸார் துரித​மாக செயல்​பட்​டால் இழந்த‌ பணத்தை மீட்​டெடுக்​க முடி​யும்​'' என தெரி​வித்​தன‌ர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x