Published : 24 Sep 2025 08:20 AM
Last Updated : 24 Sep 2025 08:20 AM

வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிஹார் அரசு துறை​களில் காலி​யாக உள்ள 1.20 லட்​சம் இடங்​களை நிரப்ப வேண்​டும். உடனடி​யாக தேர்வு அட்​ட​வணையை வெளி​யிடக் கோரி தலைநகர் பாட்​னா​வில் கடந்த 19-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​பட்​டது. இதில் ஏராள​மான இளைஞர்​கள் பங்​கேற்​று, முதல்​வர் நிதிஷ் குமாரின் வீட்டை முற்​றுகை​யிட முயன்​றனர். அப்​போது போலீ​ஸார் தடியடி நடத்தி போராட்​டக்​காரர்​களை விரட்​டியடித்​தனர்.

இந்த வீடியோவை மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்​டார். அதோடு பிரதமர் நரேந்​திர மோடி மரம் நடு​வது, குழந்​தைகளின் பாடலை கேட்​பது, வனப்​பகு​தியை பார்​வை​யிடு​வது, மயில்​களுக்கு உணவு அளிப்​பது, உடற்​ப​யிற்சி செய்​வது தொடர்​பான வீடியோவை​யும் அவர் வெளி​யிட்டு உள்​ளார்.

வீடியோவுடன் ராகுல் காந்தி வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​தி​யில் ஆளும் பாஜக ஆட்​சி​யில் வேலை​வாய்ப்​பின்மை அதி​கரித்து வரு​கிறது. கடந்த 45 ஆண்​டு​களில் இல்​லாத வகை​யில் வேலை​வாய்ப்​பின்மை மிக அதி​க​மாக உள்​ளது. வேலை​வாய்ப்​பின்​மைக்​கும் வாக்கு திருட்​டுக்​கும் நேரடி தொடர்பு உள்​ளது. மக்​களின் நம்​பிக்​கையை பெறும் கட்​சி, ஆட்சி அமைக்​கிறது. அந்த ஆட்​சி​யின் முதல் பணி இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்​பு​களை வழங்​கு​வது ஆகும்.

ஆனால் மக்​களின் நம்​பிக்​கையை பெற்று ஆட்சி அமைத்த பாஜக, இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்​பு​களை வழங்​க​வில்​லை. அவர்​களின் எதிர்​காலம் கேள்விக் குறி​யாகி உள்​ளது. இவ்​வாறு ராகுல்​ காந்​தி தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x