Published : 24 Sep 2025 07:14 AM
Last Updated : 24 Sep 2025 07:14 AM

இண்டியா கூட்டணியில் அழைப்பு இல்லை: ஒவைசி தனித்து போட்​டி​

பாட்னா: ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யின் தலை​வரும் ஹைத​ரா​பாத் எம்​.பி.​யு​மான அசாதுதீன் ஒவைசி பிஹாரில் இண்​டியா கூட்​ட​ணி​யில் இணைந்து போட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்​திருந்​தார். இது தொடர்​பாக ஆர்​ஜேடி கட்​சிக்கு 3 முறை கடிதம் எழு​தி​ய​போ​தி​லும் அவர்​களிடம் இருந்து பதில் வரவில்லை என்று அவர் கூறி​னார்.

இது தொடர்​பாக அவர் அண்​மையில் கூறுகை​யில், எங்​களுக்கு 6 இடங்​கள் போதும். அமைச்​சர் பதவி தேவை​யில்லை என்​றோம். இதற்கு மேல் நாங்​கள் என்ன செய்ய முடி​யும்?” என்​றார். இந்​நிலை​யில் பிஹாரில் ‘சீ​மாஞ்​சல் நியாய யாத்​திரை' என்ற பெயரில் 3 நாள் பிரச்​சா​ரத்தை ஒவைசி நேற்று தொடங்​கி​னார். இதன் மூலம் பிஹாரில் அவர் தனித்து போட்​டி​யிடு​வார் என்று தெரி​கிறது. பிஹாரில் கடந்த 2020 தேர்​தலில் ஒவைசி 25 இடங்​களில் போட்​டி​யிட்டு 5 இடங்​களில் வென்​றார்.

இதுகுறித்து ஆர்​ஜேடி வட்​டாரங்​கள் கூறுகை​யில், “சீ​மாஞ்​சல் பகு​தி​யில் ஒவைசி கட்​சிக்கு இப்​போது இடம் கொடுப்​பது, எதிர்​காலத்​தில் முஸ்​லிம்​கள் அதி​கம் வசிக்​கும் தர்​பங்​கா, மது​பானி உள்​ளிட்ட பிற இடங்​களில் அக்​கட்சி இடங்​களை கேட்க வழி​வகுக்​கும். மேலும் ஒவைசி கட்​சியை எங்​களு​டன் சேர்த்​தால், வரும் தேர்​தலை இந்​து -​ முஸ்​லிம்​கள் இடையி​லான போட்​டி​யாக பாஜக மாற்​றி​விட வாய்ப்​புள்​ளது" என்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x