Published : 24 Sep 2025 07:00 AM
Last Updated : 24 Sep 2025 07:00 AM

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட் தலைவர் உயிரிழப்பு

காட்டா ராமச்சந்திர ரெட்டி, காட்டா ராமச்சந்திர ரெட்டி

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர்​-ம​கா​ராஷ்டிர மாநில எல்​லை​யில் நேற்று முன்​தினம் நடந்த துப்​பாக்​கிச் சண்​டை​யில் மாவோ​யிஸ்ட் தலை​வர்​கள் ராஜு தாதா (எ) காட்டா ராமச்​சந்​திர ரெட்​டி, கோசா தாதா காதரி சத்​ய​நா​ராயண ரெட்டி ஆகியோர் உயிரிழந்தனர். இவர்​கள் இரு​வரும் சிபிஐ(​மாவோ​யிஸ்ட்) இயக்​கத்​தின் மத்​தி​யக் குழு உறுப்​பினர்​களாக செயல்​பட்டு வந்​துள்​ளனர்.

இதுகுறித்து நாராயண்​பூர் போலீஸ் எஸ்​.பி. ராபின்​சன் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: என்​க​வுன்ட்​டரில் இறந்த 2 மாவோ​யிஸ்ட் தலை​வர்​களுக்​கும் தலா ரூ.40 லட்​சத்தை வெகும​தி​யாக சத்​தீஸ்​கர் அரசு அறி​வித்​திருந்​தது. அபுஜ்​மார் மண்​டலத்​தில் மாவோ​யிஸ்ட்​களின் நடமாட்​டம் இருப்​ப​தாக தகவல் வந்​ததையடுத்து இங்கு போலீ​ஸார் தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர்.

திங்கள் கிழமை மாலை போலீ​ஸாரைப் பார்த்​ததும், மாவோ​யிஸ்ட்​கள் துப்​பாக்​கி​யால் சுட ஆரம்​பித்​தார். அப்​போது நடந்த துப்​பாக்​கிச் சண்​டை​யில் இரு​வரும் இறந்​தனர். சம்பவ இடத்திலிருந்து ஏகே-47 ரக துப்​பாக்​கி, ரைபிள், வெடிகுண்​டு​கள், மாவோ​யிஸ்ட் துண்டு பிரசுரங்கள் உள்​ளிட்​டவை கைப்பற்றப்​பட்​டன. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தா​ர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x