Published : 23 Sep 2025 08:11 AM
Last Updated : 23 Sep 2025 08:11 AM

16 மாநிலங்களின் வருவாய் உபரியாக உள்ளது: உ.பி. முதலிடம் வகிப்பதாக சிஏஜி அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: மாநில அரசுகளின் பொருளா​தார செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வறிக்​கையை மத்​திய கணக்கு தணிக்​கை​யாளர் (சிஏஜி) அலு​வல​கம் வெளி​யிட்​டுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டில் உள்ள 16 மாநிலங்​களின் வரு​வாய் உபரி​யாக உள்​ளது. இதற்கு முன்பு பற்​றாக்​குறை மாநிலங்​கள் பட்​டியலில் இருந்த உத்தர பிரதேசம் இப்​போது உபரி வரு​வாய் மாநிலங்​களில் முதலிடம் பிடித்​துள்​ளது. கடந்த 2022-23 நிதி​யாண்​டில் உத்தர பிரதேசத்​தின் உபரி வரு​வாய் ரூ.37 ஆயிரம் கோடி​யாக இருந்​தது.

இந்​தப் பட்​டியலில் குஜ​ராத் (ரூ.19,865 கோடி), ஒடிசா (ரூ.19,456 கோடி), ஜார்க்​கண்ட் (ரூ.13,564 கோடி), கர்​நாடகா (ரூ.13,496 கோடி), சத்​தீஸ்​கர் (ரூ.8,592 கோடி), தெலங்​கானா (ரூ.5,944 கோடி), உத்​த​ராகண்ட் (ரூ.5,310 கோடி), கோவா(ரூ. 2,399 கோடி) ஆகியவை அடுத்​தடுத்த இடங்​களில் உள்​ளன.

இது​போல, பற்​றாக்​குறை மாநிலங்​கள் பட்​டியலில் இருந்த மற்​றொரு மாநில​மான மத்​திய பிரதேச​மும் (ரூ.4,091 கோடி) உபரி வரு​வாய் மாநில பட்​டியலில் இடம்​பிடித்​துள்​ளது. மேலும் அருணாச்​சல், மணிப்​பூர், மிசோரம், நாகாலாந்​து, திரிபுரா மற்​றும் சிக்​கிம் ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்​களும் உபரி வரு​வாய் மாநில பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளன. இந்த 16-ல் 10 மாநிலங்​களில் பாஜக ஆட்​சி​யில் உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

இதே கால​கட்​டத்​தில் (2022-23) வரு​வாய் பற்​றாக்​குறை உள்ள மாநிலங்​கள் பட்​டியலில் ஆந்​திர பிரதேசம் (-ரூ.43,488 கோடி), தமிழ்​நாடு (-ரூ.36,215 கோடி), ராஜஸ்​தான் (-ரூ.31,491 கோடி), மேற்கு வங்​கம் (-ரூ.27,295 கோடி), பஞ்​சாப் (-ரூ.26,045 கோடி), ஹரி​யானா (-ரூ.17,212 கோடி), அசாம் (-ரூ.12,072 கோடி), பிஹார் (-ரூ.11,288 கோடி), இமாச்சல பிரதேசம் (-ரூ.6,336 கோடி), கேரளா (-ரூ.9,226 கோடி), மகா​ராஷ்டிரா (-ரூ.1,936 கோடி) மேகாலயா (-ரூ.44 கோடி) ஆகிய 12 மாநிலங்​கள் இடம்​பெற்​றுள்​ளன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x