Published : 23 Sep 2025 07:56 AM
Last Updated : 23 Sep 2025 07:56 AM

அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணம்: ஹிண்டன்பர்க் அறிக்கை நிராகரிப்பு பற்றி கவுதம் அதானி கருத்து

புதுடெல்லி: அதானி குழு​மம் பங்​குச் சந்​தை​யில் முறை​கேடு செய்​த​தாக அமெரிக்​கா​வின் ஹிண்​டன்​பர்க் ரிசர்ச் நிறு​வனம் கடந்த 2023-ல் குற்​றம்​சாட்​டியது. இதனால், அதானி குழும பங்​கு​கள் சரிந்​தன.

இதுகுறித்து இந்​திய பங்​குச் சந்தை பரிவர்த்​தனை வாரி​யம் (செபி) விசா​ரணை நடத்​தி​யது. இரண்டு ஆண்டு விசா​ரணைக்​குப் பிறகு, அதானி குழு​மம் மீதான குற்​றச்​சாட்​டு​களுக்கு போதிய ஆதா​ரம் இல்லை என கடந்த சில தினங்​களுக்கு முன்பு செபி தெரி​வித்​தது.

இதுகுறித்து அதானி குழும தலை​வர் கவுதம் அதானி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஹிண்​டன்​பர்க் ரிசர்ச் நிறு​வனத்​தின் குற்​றச்​சாட்​டு​களால், உலகம் எங்​கள் குழு​மத்​தைப் பற்றி விவாதம் நடத்​திக் கொண்​டிருந்​தன. இதற்கு நடு​வே, எங்​கள் துறை​முகங்​கள் விரிந்​தன, மின் நிலை​யங்​கள் தடை​யின்றி இயங்​கின. அனைத்து நிறு​வனங்​களும் தொடர்ந்து முன்​னேறி வந்​தன.

இதற்கு ஊழியர்​களின் ஒத்​துழைப்பு மிக​வும் முக்​கிய பங்கு வகித்​தது. பல்​வேறு அழுத்​தங்​களுக்கு மத்​தி​யிலும் தனது செயல்​பாடு​களை சிறப்​பாக நிறைவேற்​றிய எங்​கள் குழு​மத்தின் திறன், அதன் உண்​மை​யான பண்பை வெளிப்​படுத்​து​வ​தாக அமைந்​தது.

இந்​நிலை​யில் ஹிண்​டன்​பர்க் நிறு​வனம் முன்​வைத்த குற்​றச்​சாட்​டு​கள் அனைத்​தை​யும் செபி நிராகரித்​துள்​ளது. இதன் மூலம் கடந்த 2 ஆண்​டு​களாக அதானி குழு​மம் மீது சூழ்ந்​திருந்த மேகங்​கள் வில​கி​விட்​டன. இனி அதானி குழு​மம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணம் செய்யும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x