Last Updated : 21 Sep, 2025 01:20 AM

 

Published : 21 Sep 2025 01:20 AM
Last Updated : 21 Sep 2025 01:20 AM

கர்நாடகாவில் 14 கோயில்களின் சேவை கட்டணம் அதிகரிப்பு: இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை என பாஜக விமர்சனம்

இந்து அறநிலை​யத்​துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்டி

பெங்களூரு: கர்​நாட​கா​வில் 14 முக்​கிய கோயில்​களின் சேவை கட்​ட​ணங்​கள் வரும் அக்​டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்​தப்​படு​வ​தாக இந்து அற நிலை​யத்​துறை அறி​வித்​துள்​ளது. இந்த முடிவை பாஜக கடுமை​யாக விமர்​சித்​துள்​ளது.

கர்​நாட​கா​வில் இந்து அறநிலை​யத்​துறை அமைச்​சகத்​தின்​கீழ் 34,566 கோயில்​கள் உள்​ளன. இதில் ஏ பிரி​வில் உள்ள 14 முக்​கிய கோயில்​களின் சேவை கட்​ட​ணம் வரும் அக்​டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்​தப்​படு​வ​தாக அற நிலை​யத்​துறை இயக்​குநரகம் அறி​வித்​துள்​ளது.

அதன்​படி பெங்​களூரு​வில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி கோயில், நந்தி தீர்த்த சுவாமி கோயில், குக்கே ஸ்ரீ சுப்​ரமணியா கோயில், ரெய்ச்​சூரில் உள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்​வரி கோயில் உள்​ளிட்ட 14 கோயில்​களின் பூஜை, யாகம், பிர​திஷ்டை சடங்​கு​கள் ஆகிய​வற்​றுக்​கான கட்​ட​ணங்​கள் ரூ.100 முதல் ரூ.250 வரை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. குக்கே சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பிரபல​மான ஆஷ் லேஷ பூஜை, நகர பிர​திஷ்டை சடங்​கு​களுக்​கான கட்​ட​ணம் ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

திரும்ப பெற வேண்​டும்​: இதுகுறித்து பாஜக மூத்த தலை​வரும் எதிர்க்​கட்சி தலை​வரு​மான ஆர். அசோ​கா கூறும்போது, “இந்து கோயில்​களின் சேவை கட்​ட​ணத்தை உயர்த்​து​வதன் மூலம் முதல்​வர் சித்​த​ராமையா இந்​துக்​களுக்கு இடையூறை ஏற்​படுத்தி வரு​கிறார் என்​பது உறு​தி​யாகிறது. இது இந்து மக்​களுக்கு எதி​ரான நடவடிக்​கை. இதனை அரசு திரும்ப பெற வேண்​டும்​'' என்​றார்.

கோயில் நிர்​வாகங்​கள்: இந்து அறநிலை​யத்​துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்டி கூறுகை​யில், ‘‘கோ​யில்​களின் சேவை கட்​ட​ணத்தை உயர்த்​தும் நடவடிக்கை என்​பது அந்​தந்த கோயில் நிர்​வாகங்​களால் எடுக்​கப்​பட்​டது. அவர்​களின் பரிந்​துரை​யின் அடிப்​படை​யில் அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. சேவை கட்​ட​ணம் நிர்​ண​யிப்​ப​தில் அரசு தலை​யிடு​வ​தில்​லை. இந்த கோயில்​களில் கிடைக்​கும் பணம் அரசுக்கு வரு​வதும் இல்​லை. அந்​தந்த கோயி​லின் வளர்ச்​சிக்கு மட்​டுமே பயன்​படுத்​தப்​படு​கிறது'' என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x