Published : 21 Sep 2025 01:07 AM
Last Updated : 21 Sep 2025 01:07 AM

ஓட்டலில் வெடிகுண்டு தயாரித்த தீவிரவாதி கைது

புதுடெல்லி: டெல்லி போலீ​ஸார் அண்​மை​யில் அப்​தாப் குரேஷி என்ற தீவிர​வா​தியை கைது செய்​து விசா​ரணை நடத்​தி​னர். அதன் அடிப்படையில், ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யின் இஸ்​லாம் நகரிருள்ள தபா​ராக் என்ற ஓட்​டலில் அண்​மை​யில் சோதனை நடத்​தப்​பட்​டது.

இதில் தீவிர​வாதி அஷார் டேனிஷ் உட்பட 13 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த டேனிஷ், போட்​டித் தேர்​வு​களுக்​காகத் தயா​ராகி வரும் இளைஞர் எனத் தெரிய​வந்​தது. ஆனால், இந்த பாழடைந்த ஓட்​டலில் 15-ம் எண் அறை​யில் தங்​கி​யிருந்து வெடிகுண்​டு​களை தயார் செய்து வந்​துள்​ளார் டேனிஷ். இந்த வெடிகுண்​டு​களை ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வாத இயக்​கத்​துக்​காக அவர் தயாரித்து வந்​துள்​ளார். தற்​போது இவர்​கள் கைது செய்​யப்​பட்​டதன் மூலம் வெடிகுண்​டு​களைத் தயாரித்து தீவிர​வாத செயல்​களுக்​குப் பயன்​படுத்​தும் கும்​பல் முழு​வதும் பிடிபட்​டுள்​ளது.

இவர்​கள் வெடிகுண்​டு​களைத் தயாரித்து பாஜக மூத்த தலை​வர்​களை கொலை செய்​யத் திட்​ட​மிட்​டுள்​ள​தாக​வும் போலீ​ஸார் தெரி​வித்​தனர். டேனிஷின் அறையி​லிருந்து வெடிகுண்டு தயாரிக்​கப்​படும் கன் பவுடர், பொட்​டாசி​யம் நைட்​ரேட், நாட்டு துப்​பாக்​கி​கள் ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டன. கடந்த ஆண்டு இவர் தீவிர​வாத இயக்​கத்​தில் சேர்ந்​துள்​ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x