Published : 21 Sep 2025 12:58 AM
Last Updated : 21 Sep 2025 12:58 AM

ம.பி. சுரங்கத்தில் 8 வைரங்களை தோண்டி எடுத்த பெண்

போபால்: மத்​தி​யபிரதேசத்​தில் பன்னா வைரச் சுரங்​கம் மிக​வும் பிரபல​மானது. தரமான வைரங்​கள் கொண்ட உலகின் இரண்​டாவது பெரிய சுரங்​கம் இது​வாகும்.

இங்கு 8 மீட்​டர் சுரங்க நிலம் ஆண்டுக்கு ரூ.200-க்​கு ஏலம் விடப்​படு​கிறது. வைரம் தோண்டி எடுத்த பிறகு அதை பன்னா வைர அலு​வல​கத்​தில் டெபாசிட் செய்ய வேண்​டும். இங்கு 3 மாதங்​களுக்கு ஒரு​முறை வைர ஏலம் நடை​பெறும். இதில் நாடு முழு​வ​தி​லும் இருந்து வைர வியா​பாரி​கள் பங்​கேற்​கின்​றனர். ஏலத்​தொகை​யில் 11% ராயல்​டி, 1% டிடிஎஸ் என மொத்​தம் 12% கழிக்​கப்​பட்டு எஞ்​சிய தொகை அதை கண்​டெடுத்​தவருக்கு தரப்​படும்.

இந்​நிலை​யில் இங்​குள்ள ஒரு சுரங்​கத்​தில் தோண்​டும்​போது, ரச்னா கோல்​டர் என்ற பெண் தொழிலாளி 8 வைரங்​களை கண்​டெடுத்​துள்​ளார். இவற்​றில் மிகப்​பெரிய வைரம் 0.79 காரட் எடை கொண்​ட​தாகும்.

இதுகுறித்து வைர நிபுணர் அனுபம் சிங் கூறுகை​யில், “ரச்னா கண்​டு​பிடித்த 8 வைரங்​களில் 6 வைரங்​கள் அதிக தரம் கொண்​ட​தாகும். இதில் 2 கற்​கள் நிறமற்​றவை. இந்த வைரங்​களை மாவட்ட வைர அலு​வல​கத்​தில் ரச்னா டெபாசிட் செய்​துள்​ளார். அங்கு அந்த வைரங்​கள் பல லட்ச ரூபாய்க்கு ஏலம் செல்ல வாய்ப்​புள்​ளது" என்​றார்.

3 குழந்​தைகளுக்கு தாயான ரச்​னா, ஏல விற்​பனை மூலம் கிடைக்​கும் தொகை​யால் தனது குடும்​ப​ பொருளா​தாரம் மேம்​படும்​ என நம்​பிக்​கை தெரி​வித்​​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x