Published : 20 Sep 2025 09:24 AM
Last Updated : 20 Sep 2025 09:24 AM

போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியதில் குழந்தை உயிரிழப்பு

மும்பை: ​மும்பை - அகம​தா​பாத் நெடுஞ்​சாலை​யில் தானே-கோட்​பந்​தர் சாலை இணை​யும் பகு​தி​யில் கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதனால் இப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில் மகாராஷ்டிரா வின் பல்​கார் மாவட்​டம் நைகானில் உள்ள கேலக்ஸி மருத்​து​வ​மனை​யில் 16 மாத ஆண் குழந்தை ஒன்று கடுமை​யான இடுப்பு காயங்​களு​டன் சிகிச்சை பெற்று வந்​தது.

இக்​குழந்தை மேல் சிகிச்​சைக்​காக மும்​பை​யில் உள்ள ஒரு மருத்​து​வ​மனைக்கு நேற்று முன்​தினம் அவசர​மாக கொண்டு செல்​லப்​பட்​டது. இந்​நிலை​யில் மும்பை - அகம​தா​பாத் நெடுஞ்​சாலை​யில் குறிப்​பிட்ட பகு​தி​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​ட​தில் 5 மணி நேரத்​துக்​கும் மேலாக ஆம்​புலன்ஸ் வாக​னம் சிக்​கியது. இதில் அக்​குழந்தை இறந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x