Published : 20 Sep 2025 08:30 AM
Last Updated : 20 Sep 2025 08:30 AM

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முரித்கே முகாம் அழிப்பு: லஷ்கர் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் குவாசிம் ஒப்புதல்

இலியாஸ் காஷ்மீரி, குவாசிம்.

புதுடெல்லி: ஜெய்ஸ் -இ-​முகமது கமாண்​டர் இலி​யாஸ் காஷ்மீரி ஒப்​புதலை தொடர்ந்​து, முரித்கே பகு​தி​யில் இருந்த ‘மர்​காஷ்-இ-தொய்​பா’ முகாம் ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் தரைமட்​ட​மான​தாக லஷ்கர் கமாண்​டர் குவாசிம் தற்​போது கூறி​யுள்​ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி அன்​று, லஷ்கர் பிரிவு தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் சுற்​றுலா பயணி​கள் உட்பட 26 பேர் உயி​ரிழந்​தனர். இதற்கு பதிலடி​யாக இந்​திய ராணுவம் ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை மேற்​கொண்​டது. இதில் 9 முக்​கிய தீவிர​வாத முகாம்​கள் அழிக்​கப்​பட்​டன. ஆனால், இதை பாகிஸ்​தான் மறுத்து வந்​தது.

மசூத் குடும்​பத்​தினர் மரணம்: இந்​நிலை​யில் ஜெய்​ஸ்​-இ- முகமது அமைப்​பின் கமாண்​டர் இலி​யாஸ் காஷ்மீரி சமீபத்​தில் அளித்த வீடியோ பேட்​டி​யில், “இந்​திய தாக்​குதலில் ஜெய்​ஸ்​-இ-​முகமது அமைப்​பின் பஹவல்​பூர் முகாம் தகர்க்​கப்​பட்​ட​தாக​வும், இந்த தாக்​குதலில் தங்​கள் அமைப்​பின் தலை​வர் மசூத் அசா​ரின் குடும்​பத்​தினர் சிதைக்​கப்​பட்​டனர்​” என கூறி​யிருந்​தார்.

இதையடுத்து சமூக ஊடகத்​தில் தற்​போது வெளி​யாகியுள்ள வீடியோவில் லஷ்கர் அமைப்பின் கமாண்​டர் குவாசிம் பேசுகிறார். அதில் அவர், “பாகிஸ்​தானின் முரித்கே பகு​தி​யில் தரைமட்​ட​மாகி கிடக்​கும் மர்​காஷ்-இ-தொய்பா முகாம் முன் நின்று பேசுகிறேன்.

இந்த இடத்​தில்​தான் மிகப் பெரிய முஜாகிதீன்​கள் (தீவிர​வா​தி​கள்) பயிற்சி பெற்​றனர். இந்த முகாமை நாங்​கள் இன்​னும் பெரி​தாக கட்​ட​வுள்​ளோம். ஜிகா​தி​களாக மாற விரும்​பும் இளைஞர்​கள் இந்த முகாமில் நடை​பெறும் ஆயுத பயிற்சி மற்​றும் மத போதனை​களில் கலந்து கொள்ள வேண்​டும்” என்​கிறார்.

வெள்ள நிவாரணம் என்ற பெயரில் மர்​காஷ்-இ-தொய்பா முகாமை மீண்​டும் கட்ட நிதி திரட்​டும் பிரச்​சா​ரத்​தில், மும்பை தாக்​குதலுக்கு காரண​மான ஹபீஸ் சயீத் தலை​மையி​லான குழு இறங்​கி​யுள்​ளது. அதன் ஒரு பகு​தி​தான் லஷ்கர் கமாண்​டர் குவாசிம் வெளி​யிட்​டுள்ள வீடியோ.

ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் முக்​கிய தீவிர​வாத முகாம்​கள் அழிப்பு செய்​தியை பாகிஸ்​தான் மறுத்து வந்த நிலை​யில், தீவிர​வாத அமைப்​பின் கமாண்​டர்​களே ஆதா​ரத்​துடன் வீடியோ வெளி​யிட்டு தீவிர​வாத மு​காம்​கள்​ அழிக்​கப்​பட்​டதை
ஒப்​புக்​ கொண்​டுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x