Published : 20 Sep 2025 08:23 AM
Last Updated : 20 Sep 2025 08:23 AM

ராகுல் காந்தியை நாடு நம்பாது: அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்

புதுடெல்லி: ​நாட்​டின் பல்​வேறு மாநிலங்​களில் காங்​கிரஸ் கட்​சிக்கு செல்​வாக்​குள்ள தொகு​தி​களில் பல லட்​சம் வாக்​காளர்​கள் திட்​ட​மிட்டு நீக்​கப்​பட்​டுள்​ள​தாக அக்​கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்தி நேற்று முன்​தினம் குற்​றம் சாட்​டி​னார். "அதி​காலை 4 மணிக்கு 36 வினாடிகளில் 2 வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். தேர்​தல் ஆணை​யம் விழித்​திருந்து இதை பார்த்​தா​லும் திருடர்​களை பாது​காக்​கிறது" என்று அவர் குற்​றம் சாட்​டி​னார்.

இதுதொடர்​பாக மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறிய​தாவது: காங்​கிரஸ் கட்​சிக்கு தனது தலைமை தோல்வி அடைந்​ததை ராகுல் ஏற்க வேண்​டி​யிருந்​தது. அவரது தலைமை பல தேர்​தல்​களில் காங்​கிரஸ் கட்​சி​யின் தோல்விக்கு இட்​டுச் சென்​றது.

இந்​திய இளைஞர்​கள் பிரதமர் மோடியை ஆதரிக்​கத் தொடங்​கினர். காங்​கிரஸ் கட்​சியை தொடர் தோல்விக்கு இட்​டுச் சென்ற ராகுல் இந்​தி​யா​வின் ஜனநாயக அமைப்பை அவம​திக்​கிறார். அவரை இந்த நாடு நம்​பாது.

ஏழைகள், விவ​சா​யிகள் மற்​றும் சாமானியர்​கள் பிரதமர் மோடியை தங்​கள் தலை​வ​ராக கருதுகின்​றனர். தேர்​தல் தோல்வி​களுக்கு பிறகு ராகுல் காந்தி தனது பலவீனங்​களை மறைக்க தேர்​தல் அமைப்பை குற்​றம் சாட்​டிக்​கொண்டே இருந்​தால், அதை யாரும் ஏற்க மாட்​டார்​கள். நாடு மாறி​விட்​டது, பிரதமர் மோடி​யின் தலை​மை​யின் கீழ் இந்​தியா முன்​னேறி​யுள்​ளது. இவ்​வாறு கிரண்​ ரஜிஜு கூறினார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x